கடலுக்கு அடியில் இரு நாடுகளை இணைக்கும் உலகின் மிக நீளமான மின்சார கேபிள்

‘வைகிங் லிங்க்’ உலகின் நாடுகளுக்கு இடையே உள்ள மிக நீளமான நில மற்றும் கடல் மின் கேபிள் ஆகும். இது ‘மெகாஸ்ட்ரக்சர்’ எனப்படும் ராட்சதக் கட்டமைப்பாகும். இதன் கட்டுமானத்தில் பெரும் கைவினைத்திறன் அடங்கியுள்ளது.

இது டென்மார்க்கிலிருந்து பிரிட்டன் வரை 765 கி.மீ.-க்கும் அதிகமான தூரத்திற்கு மின்சாரத்தை மேலும் கீழும் கடற்பரப்பில் கடத்திச் செல்கிறது. இது ஒரு மகத்தான பொறியியல் சாதனையாகப் பார்க்கப்படுகிறது.

இந்த இரு நாடுகளுக்கு இடையே இருக்கும் ‘வட கடல்’ ஆழம் குறைந்த கடல். இதனால் சேதம் அல்லது நாசவேலைகல் சுலபமாக ஏற்பட வாய்ப்புகள் உண்டு. இத்ற்கு எதிரான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டும்.

இந்தக் கேபிள் ஒரு மீட்டருக்கு சுமார் 40 கிலோ எடை கொண்டது. இது ஒரு தங்கக் கட்டியை விட மூன்று மடங்கு எடை அதிகம். இது இந்த மாத இறுதியில் தன் அதிகபட்ச திறனில் இயங்கும். இரு நாடுகளின் காற்றாலைகளில் உற்பத்தி செய்யப்படும் மின் ஆற்றலைக் கொண்டு செல்லும்.

  • இந்த மாபெரும் இணைப்பு எப்படி வேலை செய்கிறது?

நேஷனல் கிரிட் நிறுவனத்தின் இன்டர்கனெக்டர் துறையின் பொது இயக்குனர் ரெபேக்கா செட்லர் பிபிசிக்கு இதனை எளிதாக விளக்கினார்.

“எளிமையாகச் சொன்னால், டென்மார்க்கில் மின் பற்றாக்குறை ஏற்பட்டு, இங்கிலாந்தில் காற்று அதிகமாக இருக்கும்போது, ஒரு சுவிட்சைப் போடுவோம். இதனால் மின்சாரம் பாயும் திசை மாறி, அதிக மின்சாரம் உள்ள பகுதியிலிருந்து மின்சாரம் தேவைப்படும் இடத்திற்குச் செல்கிறது,” என்றார்.

லியோனார்டோ டாவின்சி என்ற கேபிள் பதிக்கும் கப்பல், இந்த இணைப்பின் கடைசிப் பகுதி கேபிளை ஜூலை முடித்தது.

டென்மார்க் மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகள் 2030-2035 ஆண்டுகளுக்குள் கார்பன் இல்லாத மின்சாரத்தை மட்டுமே பயன்படுத்த இலக்கு நிர்ணயித்துள்ளன.

மற்ற பல நாடுகளைப் போலவே, இங்கிலாந்திலும் தற்போது காற்று, சூரிய ஒளி, அணுசக்தி ஆகியவற்றிலிருந்து பெறப்படும் புதுப்பிக்கத்தக்க ஆற்றலைக் கொண்டு மின்தேவையை ஈடுகட்ட முடியாது. அதனால்தான் இங்கிலாந்து எரிவாயுவை எரித்து மின்சாரம் தயாரிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

  • டென்மார்க், இங்கிலாந்து, கடல், மின்சாரம்

பட மூலாதாரம்,NATIONAL GRID

இது டென்மார்க்கிலிருந்து இங்கிலாந்து வரை 765கி.மீ.-க்கும் அதிகமான தூரத்திற்கு மின்சாரத்தை மேலும் கீழும் கடற்பரப்பில் கடத்திச் செல்கிறது. இது ஒரு மகத்தான பொறியியல் சாதனையாகப் பார்க்கப்படுகிறது

புதுப்பிக்கத்தக்க ஆற்றலுக்கான தேவை

புதுப்பிக்கத்தக்க ஆற்றலின் பிரச்னை என்னவென்றால், அதைச் சேமித்து வைக்க இயலாது. அதாவது சூரிய ஒளி அதிகம் இருக்கும் நாளில் தயாரிக்கப்பட்ட மின்சாரத்தை மேகமூட்டமான நாள் வரை சேமித்து வைக்க முடியாது. அல்லது காற்று அதிகம் இருக்கும் நாளில் தயாரிக்கப்பட்ட மின்சாரத்தை, காற்று இல்லாத நாள் வரை சேமித்து வைக்க முடியாது.

இந்த கேபிள் மின்சாரத்தை தேவையான இடங்களில் அனுப்பவும் விநியோகிக்கவும் மட்டுமே பயன்படுகிறது.

டென்மார்க் 2030-ஆம் ஆண்டுக்குள் பசுமைக் குடில் வாயு வெளியேற்றத்தை 70% குறைக்கும் இலக்கை நிர்ணயித்துள்ளது. 1970-களில் காற்றாலை மின் ஆற்றலில் அதிக முதலீடு செய்யத் தொடங்கியது.

  • டென்மார்க், இங்கிலாந்து, கடல், மின்சாரம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்தத் திட்டத்திற்கான செலவு இந்திய மதிப்பில் சுமார் 19,000 கோடி ரூபாய்.

கடலுக்கு அடியில் ஒரு ‘அதிவேக நெடுஞ்சாலை’

வைக்கிங் லிங்க் என்பது உண்மையில் வட கடலைக் கடக்கும் மின்சார ‘அதிவேக நெடுஞ்சாலை’ ஆகும்.

இதன் கட்டுமானம் 2019-இல் தொடங்கியது. இதன் திட்டமிடல், கட்டுமானம், மற்றும் வேலைகளுக்காக 30 லட்சம் மணிநேரத்திற்கும் அதிகமான நேரம் செலவிடப்பட்டுள்ளது. இந்த மின் கேபிள் செப்பு, எஃகு, காகிதம் மற்றும் பிளாஸ்டிக் ஆகியவற்றால் ஆனது. கடலின் அடிப்பகுதியில் புதைக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்திற்கான செலவு இந்திய மதிப்பில் சுமார் 19,000 கோடி ரூபாய். இதன் ஒரு நன்மை என்று வல்லுநர்கள் கூறுவது, இரு நாடுகளுக்கும் இடையே உள்ள நேர வித்தியாசம். இதனால், மின் ஆற்றலின் உச்ச பயன்பாடு வெவ்வேறு நேரங்களில் ஏற்படும்.

இது சிறப்பனதாகத் தோன்றினாலும், ‘வைக்கிங் இணைப்பு’, தன் வகையின் மிக நீளமானதாக இல்லாமல் போகலாம்.

தற்போது திட்டமிடப்பட்டிருக்கும் ‘ஆஸ்திரேலியா-ஆசியா’ மின் இணைப்பு, ஆஸ்திரேலியாவின் வடக்கு தலைநகரான டார்வின் நகரை இந்தோனேசியா மற்றும் சிங்கப்பூருடன் இணைக்கும். அதன் மொத்த நீளம் 4,200கி.மீ-ஆக இருக்கும்.

  • டென்மார்க், இங்கிலாந்து, கடல், மின்சாரம்
பூமி முழுவதும் கடலுக்கு அடியில் உள்ள கேபிள்களின் வரைபடம்

10 லட்சம் கி.மீ நீளமான கேபிள்கள்

கடல்களுக்கடியில் பல தொலைத்தொடர்பு கேபிள்கள் உள்ளன. பூமி முழுதும், 10 லட்சம் கிமீ.க்கும் அதிகமான கேபிள்கள் நிறுவப்பட்டிருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

2017-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், மைக்ரோசாப்ட், ஃபேஸ்புக், மற்றும் உலகளாவிய தொலைத்தொடர்பு உள்கட்டமைப்பு நிறுவனமான டெல்க்சியஸ் ஆகியவை இணைந்து அட்லாண்டிக் பெருங்கடலில் 5,000மீட்டருக்கும் அதிகமான ஆழத்தில் மரியா நீர்மூழ்கிக் கப்பல் கேபிளை நிறுவி முடித்தன. இது அமெரிக்காவில் உள்ள வர்ஜீனியா கடற்கரையை ஸ்பெயினில் உள்ள பில்பாவோவுடன் இணைக்கிறது.

இந்தக் கேபிள்கள் பிரத்யேக கப்பல்களால் அமைக்கப்பட்டன. அவை மிகப்பெரும் மின் வயர்களின் சுருள்களை மெதுவாக கடலின் அடிப்பகுதியில் போடுகின்றன.

வைக்கிங்கின் தனித்தன்மை என்னவெனில் அது, மின் ஆற்றலை துல்லியமாகக் கடத்துகிறது.

  • கண்டங்களை இணைக்கும் கேபிள்கள்

அமெரிக்கத் தொலைத்தொடர்பு ஆலோசனை நிறுவனமான டெலிஜியோகிராஃபி, ‘நீர்மூழ்கிக் கப்பல் கேபிள் மேப் போர்ட்டல் என்ற வரைபடத்தை உருவாக்கியது. இது கூகுள், ஃபேஸ்புக், அமேசான், வெரிசான், அல்லது AT&T போன்ற நிறுவனங்களின் தரவுகளுடன் உலகில் பயன்படுத்தப்படும் அனைத்து நீர்மூழ்கி கேபிள்களின் ஊடாடும் வரைபடமாகும்.

உலகம் முழுவதும் 13 லட்சம் கி.மீ. தூரம் நீண்டிருக்கும் 400க்கும் மேற்பட்ட நீர்மூழ்கிக் கேபிள்கள் உள்ளன.

ஐரோப்பாவையும் வட அமெரிக்காவையும் இணைக்கும் முக்கியக் கேபிள் இணைப்பு அட்லாண்டிக் பெருங்கடலில் அமைந்திருப்பதை இந்த வரைபடத்தில் இருந்து பார்க்கலாம்.

மறுபுறம், பசிபிக் பெருங்கடலில் உள்ள பெரிய கேபிள் இணைப்பு, அமெரிக்காவை ஜப்பான், சீனா மற்றும் பிற ஆசிய நாடுகளுடன் இணைக்கிறது.

அமெரிக்காவின் மியாமியிலிருந்து, பல கேபிள் இணைப்புகள் மத்திய அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்காவை அடைகின்றன.

உதாரணமாக, மெக்ஸிகோவைப் பொறுத்தவரை, பெரும்பாலான கேபிள்கள் நாட்டின் கிழக்கிலிருந்து தொடங்கி மெக்ஸிகோ வளைகுடாவைக் கடந்து புளோரிடாவுக்குச் சென்று அங்கிருந்து மத்திய மற்றும் தென் அமெரிக்காவுடன் இணைக்கின்றன.

பிபிசி தமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *