பயங்கரவாத குழுவிடம் சிக்கிய இலங்கையர்கள்: கோடிக்கணக்கில் கப்பம் கேட்டு கொடுமை

வேலைவாய்ப்புக்காக வெளிநாடு செல்லும் இலங்கையர்கள் பாரிய இன்னல்களுக்கு உள்ளாகி வருகின்றனர்.

அந்தவகையில் தாய்லாந்தில் வேலைக்காக சென்ற 56 இலங்கையர்கள் மியன்மாரை சேர்ந்த பயங்கரவாத குழுவொன்றிடம் சிக்கியுள்ள நிலையில் சித்திரவதைக்கு உள்ளாகி உள்ளனர்.

8000 அமெரிக்க டொலர்

பயங்கரவாதிகளின் தங்களின் தொழில்நுட்ப பிரிவில் இவர்களை தடுத்து வைத்த சித்திரவதை செய்து வருவதாக மியன்மாருக்கான இலங்கை தூதுவர் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத குழுவிடம் சிக்கிய இலங்கையர்கள்: கோடிக்கணக்கில் கப்பம் கேட்டு கொடுமை | Sri Lankans Going Abroad For Employment

குறித்த 58 இலங்கையர்களையும் விடுவிப்பதற்காக தலா ஒரு நபரிடமிருந்து 8000 அமெரிக்க டொலர்களை பயங்கரவாத குழுவினர் கோருகின்றனர்.

மியன்மார் அதிகாரிகளுடனான பேச்சுவார்த்தைகளின் பின்னர் 32 பேரை விடுவித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

 

ஏனைய 56 பேரையும் விடுதலை செய்வதற்கான முயற்சிகள் இடம்பெற்று வருவதாக இலங்கை தூதுவர் குறிப்பிட்டுள்ளார்.

சட்டவிரோதமான வழிமுறைகள் மூலம் மியன்மார் அல்லது தாய்லாந்திற்கு செல்ல முயலவேண்டாம் என இலங்கையர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *