உணவுக்காக திருடத் தொடங்கியுள்ள சீன மக்கள்!

சீனாவின் ஷாங்காய் மாகாணத்தில் நிலவும் 3 வாரகால ஊரடங்கை தொடர்ந்து, அங்குள்ள குடியிருப்புவாசிகள் முண்டியடித்து கொண்டு அருகிலுள்ள உணவு நிலையத்தில் இருந்து உணவு பொருள்களை திருடி செல்லும் காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவில் அதிகரித்து வரும் கரோனா பாதிப்பு காரணமாக ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி கடுமையான தடைகளை விதித்து வருகிறது, அந்தவகையில் சீனாவின் ஷாங்காய் மாகாணத்தில் 22 நாள்களுக்கு மேலாக பொதுமுடக்கம் அமுலில் உள்ளது. மேலும் இரண்டு நாள்களுக்கு ஒருமுறை மட்டுமே பொதுமக்களை உணவு பொருள்கள் மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்கான பொருள்களை வாங்குவதற்கு அனுமதிக்கப்பட்டுகின்றனர்.

இந்தநிலையில், தொடர்ந்து கரோனா பாதிப்பு அதிகரித்து வருவதாலும், பொதுமுடக்கத்தை நீக்குவதற்கான எந்தவொரு அறிகுறியும் தெரியாததாலும் பொதுமக்கள் உணவு பொருள்களை வாங்குவதற்காக அருகிலுள்ள உணவு விநியோக கூடங்களில் குவிந்து வருகின்றனர்.

அந்தவகையில் நேற்று சீனாவின் ஷாங்காய் மாகாணத்தில் உள்ள அவசர உணவு விநியோக புள்ளிகளில் கூடிய மிகப்பெரிய பொதுமக்கள் கூட்டம் அங்கிருந்து பொருள்களை திருடிக்கொண்டு ஓடியது பெரும் பரபரப்பை அப்பகுதியில் ஏற்படுத்தியுள்ளது.

இத்தைகைய நெருக்கடி நிலையானது, அதிகரித்து வரும் கடினமான கட்டுப்பாடு, உணவு பொருள்களின் தட்டுப்பாடு குறித்த அச்சம் மற்றும் விநியோகங்கள் சரிவர நடைபெறாதது ஆகியவற்றின் விளைவாக பொதுமக்கள் உணவு பொருள்களை திருடும் நிலைக்கு தள்ளப்பட்டு இருப்பதாக தெரியவந்துள்ளது.

இதனை தொடர்ந்து சீனாவின் கட்டுப்பாடுகள் குறித்து பேசியுள்ள அமெரிக்க வழக்கறிஞர் ஜாரெட் டி. நெல்சன் கட்டுப்பாடுகள் மிகவும் கடுமையாக இருக்கின்றன, அதைவிட கரோனா கட்டுப்பாட்டு மையங்கள் மிகுந்த சங்கடத்தை ஏற்படுத்துவதாக தெரிவித்துள்ளார்.

மேலும் சீனாவின் தீவிர கட்டுப்பாடுகளானது, தொற்று பாதித்த 7 வயது சிறுவனை பெற்றோரிடம் இருந்து பிரித்து செல்லும் அளவுக்கு இருப்பதாக தெரிவித்துள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *