பிரபஞ்சத்தில் பூமியின் அமைப்பை ஒத்த கிரகம் கண்டுபிடிப்பு

இந்தப் பரந்த பிரபஞ்சத்தில் நம் கற்பனைக்கும் எட்டாத பல அதிசயங்கள் காணப்படுகின்றன.

நம் சூரிய குடும்பத்தைப் போல வேறு சூரிய குடும்பங்கள், பூமியைப்போல வேறு கிரகங்கள் என விஞ்ஞானிகளின் ஆய்வுகளால் கண்டுபிடிக்கப்பட்ட விடயங்கள் ஏராளம் உள்ளது.

அந்த வரிசையில், தற்போது விஞ்ஞானிகளின் கவனம் மனிதன் வாழக்கூடிய சூழலை உடைய கிரகம் இந்த பிரபஞ்சத்தில் உள்ளதா என்பதை அறியும் வண்ணம் நீடித்துச் செல்கிறது.

மிக நீண்ட ஆய்வுகளிற்கு பின்னர், பூமியிலிருந்து 22 ஒளியாண்டுகள் தூரத்திற்கு அப்பால் பூமியை ஒத்த அமைப்புடைய நிலப்பரப்போன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதனை எக்ஸோப்ளானட் (LTT 1445 Ac) என விஞ்ஞானிகள் பெயரிட்டுள்ளனர்.

பிரபஞ்சத்தில் பூமியின் அமைப்பை ஒத்த கிரகம் விஞ்ஞானிகளால் கண்டுபிடிப்பு | Earth Sized Exoplanet Discovered In The Universe

இந்த எக்ஸோப்ளானட் ஆனது பல்வேறு நட்சத்திர அமைப்புக்களைச் சுற்றி காணப்படுவதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

எமது பூமி சூரியனைச் சுற்றி வலம் வருவதைப்போல இந்த LTT 1445 Ac யானது சிவப்பு நிற சூரியனைப் போன்ற அமைப்பைச் சுற்றி வலம் வருகிறது.

இந்த சிவப்பு சூரியனைப் போன்ற அமைப்பானது நமது சூரியனைக் காட்டிலும் பிரகாசம் குறைவாக மங்கலாக இருப்பது மாத்திரமன்றி இதன் மேற்பரப்பு வெப்பநிலை குறைவாக இருப்பதால் இந்த சிவப்பு சூரியன் மங்கலாக குளிர்மையானதாக காணப்படுகிறது என்று வானியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆனால் சிவப்புச்சூரியன் குளிர்மையானதாக இருக்கின்ற போதிலும் LTT 1445 Ac யானது வெப்பமான கிரகமாக காணப்படுவது விஞ்ஞானிகளை ஆச்சரியப்படுத்தியுள்ளது.

இதற்கான காரணத்தினைக் கண்டறிவதற்காக நடத்தப்பட்ட ஆய்வுகளின் விளைவாக LTT 1445 Ac யினைச் சுற்றி நட்சத்திரங்கள் காணப்படுவதனாலேயே இந்த கிரகம் வெப்பமாக இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

பிரபஞ்சத்தில் பூமியின் அமைப்பை ஒத்த கிரகம் விஞ்ஞானிகளால் கண்டுபிடிப்பு | Earth Sized Exoplanet Discovered In The Universe

மேலும், இந்த LTT 1445 Ac யானது 3.12 நாட்கள் சுற்றுப்பாதையைக் கொண்டுள்ளது, மேலும் இந்த LTT 1445 Ac யானது பூமியைக்காட்டிலும் 1.37 மடங்கு நிறையும், 1.07 மடங்கு விட்டமும் உடைய அமைப்பாக இந்த கிரகம் திகழ்கிறது.

ஏறத்தாழ பூமியின் அளவை ஒத்த அமைப்புடையதாக இந்த LTT 1445 Ac காணப்பட்டாலும், இதன் மேற்பரப்பிலுள்ள அதிகரித்த வெப்பம் காரணமாக இங்கே மனிதன் வாழ்வதற்கான சாத்தியம் இல்லை எனவும் எதிர்காலத்தில் மனிதன் வாழ்வதற்கான சாத்தியம் உருவாக வாய்ப்புக்கள் உள்ளதா என்று ஆய்வுகள் தொடர்ந்து வருவதாகவும் நிபுணர்கள் கூறி வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *