– ஐ.ஏ. காதிர் கான் –
( மினுவாங்கொடை – கட்டுநாயக்க செய்தியாளர் )

பூகொட – குமாரிமுல்ல முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் பணியாற்றும் எம்.எம். மொஹமட் ஆசிரியர், அண்மையில் வெளியிடப்பட்ட இலங்கை அதிபர் சேவைக்கு உள் வாங்கப்பட்டோர் பெயர்ப் பட்டியலில், உயர் தர சித்தியுடன் அதிபர் சேவை தரம் – 3 ற்கு பதவி உயர்வு பெற்றுள்ளார்.

இவருக்கான நியமனக் கடிதம், கல்வி அமைச்சினால் அண்மையில் (04.11.2023) கையளிக்கப்பட்டன.
மல்வானை – அல் முபாறக் மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) யில் கல்வி பயின்றவரும், குமாரிமுல்ல முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் 2012 ஆம் ஆண்டு முதல் தமிழ் மொழி பாட ஆசிரியராக, 13 வருடங்களாக (அதிபர் நியமனம் கிடைக்கும் வரை) பணியாற்றி வருபவருமான மொஹமட் ஆசிரியர், மல்வானையை பிறப்பிடமாகவும் இருப்பிடமாகவும் கொண்டுள்ளதுடன், மல்வானையைச் சேர்ந்த மர்ஹூம் முஹம்மது மிஹ்ளார் – பௌசுல் இனாயா ஆகியோரின் புதல்வருமாவார்.

இதேவேளை, கம்பஹா கல்வி வலயத்தினுள் தெரிவு செய்யப்பட்டு, மல்வானை மண்ணுக்கும், குமாரிமுல்ல முஸ்லிம் மகா வித்தியாலயத்திற்கும் பெருமை ஈட்டிக்கொடுத்த மொஹமட் ஆசிரியருக்கு, பாடசாலை பழைய மாணவர் சங்கம், பாடசாலை அபிவிருத்திச் சங்கம் மற்றும் நலன் விரும்பும் குழு என்பன, வித்தியாலய அதிபர் டி.எம்.எஸ். எம். அவுன், பிரதி அதிபர் திருமதி எம்.எச்.இஸட். பௌஸானா உள்ளிட்ட ஆசிரியர் குழாம் சார்பாக உளமாற வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *