தங்க நாணயங்கள் அடங்கிய புதையல் கண்டுபிடிப்பு

கொலம்பியா கடற்படைக்கு சொந்தமான சான் ஜோஸ் என்ற கப்பல் கடந்த 1,708-ம் ஆண்டு இங்கிலாந்து படையால் கார்டஜீனா துறைமுகத்தில் மூழ்கடிக்கப்பட்டது.

கடலின் மேற்பரப்பில் இருந்து சுமார் 3 ஆயிரத்து 100 அடிக்கு கீழே ஆழ் கடலில் மூழ்கி கிடக்கும் இந்த கப்பலை மீட்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த இந்த கப்பலில் 200 டன் எடையுள்ள மரகதலிங்கம், வெள்ளி மற்றும் 11 பில்லியன் (இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் ரூ.91.51 ஆயிரம் கோடி) தங்க நாணயங்கள் அடங்கிய பெரிய அளவிலான புதையல் இருப்பதாக கூறப்படுகிறது.

கடந்த ஆண்டு ஆழ்கடலில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இந்த ஆய்வின் போது மூழ்கி கிடந்த பழமையான கப்பலின் உடைந்த பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த கப்பல் பாகத்தில் இருந்து சில தங்க நாணயங்கள், ஜாடிகள், குவளைகள் சிக்கியது.

மூழ்கி கிடக்கும் கப்பலில் இன்னும் இந்திய ரூபாய் மதிப்பில் மொத்தம் 1 இலட்சத்து 66 ஆயிரம் கோடி (20 பில்லியன்) மதிப்பிலான பொக்கிஷங்கள் இருப்பதாக தெரிய வந்துள்ளது.

இந்த கப்பலை 2026-ம் ஆண்டுக்குள் மீட்க கொலம்பியா அரசு முடிவு செய்துள்ளது. அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சேதமடைந்த கப்பலை மீட்டால் தான் அதில் எவ்வளவு தங்க நகைகள் மற்றும் பொக்கிஷங்கள் உள்ளது என்பது தெரியவரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *