NASA அறிமுகம் செய்யும் இலவச ஒலிபரப்பு சேவை!

 

புதுமை மற்றும் தொலைநோக்குப் பார்வையுடனான செயல்பாடு என்றாலே நமக்கு முதலில் நாசா தான் நினைவுக்கு வரும். அதற்கு ஏற்றவாறு அவர்களும் பல புதிய விஷயங்களில் எப்போதுமே ஈடுபட்டு வருகின்றனர். மனிதர்களை விண்வெளிக்கு அனுப்புவது, சந்திரனில் விண்வெளி வீரர்களை தங்க வைப்பது, சிறுகோள்களை நோக்கி செயற்கைக்கோள்களை அனுப்புவது என நாம் நம்ப முடியாத பல திட்டங்களை சிறப்பாக செய்துவருகிறது நாசா.

விண்வெளி சார்ந்த ஆய்வுகளில் நாசா புதிதாக முயற்சிக்காத விஷயங்களே இல்லை எனக் கூறலாம். அந்த அளவுக்கு அவர்களின் ஆராய்ச்சி தீவிரமாக நடத்தப்பட்டு வருகிறது. இப்போது நாம் யாருமே எதிர்பார்க்காத வகையில் NASA Plus என்ற புதிய ஸ்ட்ரீமிங் சேவையை அடுத்த வாரம் நாசா அறிமுகம் செய்ய உள்ளது. இதை அவர்கள் அறிமுகம் செய்தால் இதற்காக சேவைக் கட்டணம் என நாம் எதுவும் செலுத்தத் தேவையில்லை. அதேபோல மற்ற ஸ்ட்ரீமிங் தளங்களைப் போல இதில் எந்த விளம்பரங்களும் இருக்காது. முற்றிலும் விளம்பரமே இல்லாத ஸ்ட்ரீமிங் தளமாக நாசா பிளஸ் செயல்பட உள்ளது.

குறிப்பாக இதில் நாசாவின் சில நேரடி ஒளிபரப்புகள், அவர்களின் பணி சார்ந்த நிகழ்ச்சிகள் வெளியிடப்படும் என அவர்கள் கூறியுள்ளனர். சமீப காலமாகவே நாசா ராக்கெட்டுகளை விண்வெளிக்கு அனுப்புவதையும் தாண்டி பல புதிய முயற்சிகளையும் சோதனை செய்து வருகிறது. அதில் ஒரு அங்கமாகத்தான் நாசாவின் இந்த ஸ்ட்ரீமிங் சேவை வரும் நவம்பர் 8ம் தேதி தன் சேவையைத் தொங்க உள்ளது.

இதுவரை பீட்டாவில் இருந்த இந்த ஸ்ட்ரீமிங் தளம், அடுத்த வாரத்தில் அனைவருக்கும் கிடைக்கும் படியாக மாறப்போகிறது. மற்ற வணிகரீதியில் செயல்படும் ஸ்ட்ரீமிங் தளங்களை போலின்றி விளம்பரம் இல்லாமலும், சந்தா சேவை கட்டணம் எதுவும் இல்லாமலும் தொடங்கப்படும் இந்த தளத்தில் புதிய தொடர்களுடன் நாசாவின் சில நேரடி காணொளிகளும் பயனர்களின் பார்வைக்கு வழங்குவதாக நாசா கூறுகிறது.

நாசாவின் இந்த முடிவு அவர்களின் ஒட்டுமொத்த டிஜிட்டல் மாற்றத்தின் ஒரு பகுதியாகவே பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *