காசா குறித்து முன்னாள் இந்திய வீரர் உருக்கம்!

ஹமாஸ் அமைப்புக்கு எதிரான நடவடிக்கையாக காசா மீது இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தி வருகிறது.

இதற்கு பல்வேறு நாடுகள் இஸ்ரேலுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றன.

மேலும் காசாவில் பிரதான மருத்துவமனைக்கு வெளியே இருந்த அம்புலன்ஸ் மீதும் இஸ்ரேலிய விமானம் தாக்குதல் நடத்தியதில் பலர் கொல்லப்பட்டதாக காசாவின் சுகாதார துறை வலியுறுத்தியுள்ளது.

இந்நிலையில், காசாவில் குழந்தைகள் உயிரிழந்தது குறித்து இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் இர்ஃபான் பதான் வேதனை தெரிவித்துள்ளார்.

காசா குறித்து முன்னாள் இந்திய வீரர் உருக்கம்! | Irfan Pathan Is Sad About The Children Dying Gaza

அத்துடன், போரினால் தொடர்ச்சியாக அப்பாவி உயிர்கள் கொல்லப்பட்டு வருகின்றமை குறித்தும் அவர் வேதனை தெரிவித்துள்ளார்.

அவர் தனது பதிவில்,

காசா குறித்து முன்னாள் இந்திய வீரர் உருக்கம்! | Irfan Pathan Is Sad About The Children Dying Gaza

“இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையேயான போரில் காசாவில் ஒவ்வொரு நாளும் 10 வயதிற்குட்பட்ட அப்பாவி குழந்தைகள் இறக்கிறார்கள்.

இதனைப் பார்த்தும் இந்த உலகம் அமைதியாக இருக்கிறது.

ஒரு விளையாட்டு வீரனாக, என்னால் பேச மட்டுமே முடிகிறது.

உலக தலைவர்கள் ஒன்றுகூடி இந்த நியாயமற்ற கொலைகளை நிறுத்த வேண்டிய முக்கியமான நேரம் இது.” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *