QR குறியீட்டுடன் சாரதி அனுமதிப்பத்திரம் வழங்க நடவடிக்கை

டிஜிட்டல் அல்லது ஸ்மார்ட் சாரதி அனுமதிப்பத்திரத்தினை அறிமுகப்படுத்துவதற்கு மோட்டார் போக்குவரத்து திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன்படி, அட்டைக்கு பதிலாக QR குறியீட்டுடன் சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

சாரதி அனுமதிப்பத்திரம் அச்சிடும் நடவடிக்கை முன்னதாக இராணுவத்தினால் மேகொள்ளப்பட்டு வந்தது.

குறித்த நடவடிக்கை மீண்டும் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டதன் பின்னர் டிஜிட்டல் சாரதி அனுமதிப்பத்திரத்தை அச்சிடும் பணிகள் கடந்த ஒக்டோபர் மாதம் 16 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டதாக ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க தெரிவித்துள்ளார்.

கடந்த ஒக்டோபர் மாதம் 11ஆம் திகதி அமைச்சரவையின் அனுமதி கிடைத்த பின்னர் டிஜிட்டல் சாரதி அனுமதிப்பத்திரத்தை நடைமுறைப்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டது.

பொருளாதார நெருக்கடி காரணாமாக சிப்களை (Chip Reading Units) இறக்குமதி செய்வது கடினமானது.

இந்த நிலையில், சிப்புக்கு பதிலாக QR குறியீட்டை பயன்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் மற்றும் பொலிஸ் அலுவலகம் மாத்திரம் QR குறியீட்டு தகவல்களை பெற்றுக்கொள்ளும் வகையில் செயலி ஒன்றும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *