நடிகரான இயக்குநர் லோகேஷ் கனகராஜ்!

பிரபல நடன இயக்குநர் சாண்டியின் “பாஸ்ட் ஐஸ் பாஸ்ட்” என்கின்ற தலைப்பில் வைசாக் என்பவருடைய இசையில் உருவாகியிருக்கும் மியூசிக் காணொளியில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடித்துள்ளார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான லியோ திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வசூலில் வேட்டையாடி வருகின்றது.

லியோ திரைப்படத்தில் பிரபல நடன இயக்குனரும், நடிகருமான சாண்டி முக்கியமாக வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இந்த படம் சாண்டிக்கு ஒரு மாபெரும் திருப்புமுனையாக அமைந்திருக்கிறது என்று கூறினால் அது மிகையல்ல.

இந்நிலையில், சாண்டி “ பாஸ்ட் ஐஸ் பாஸ்ட்” என்கின்ற தலைப்பில் வைசாக் என்பவருடைய இசையில் ஒரு புதிய மியூசிக் வீடியோவை உருவாக்கியுள்ளார்.

கடந்த ஒக்டோபர் 23ம் திகதி வெளியான இந்த மியூசிக் காணொளியில் லோகேஷ் கனகராஜ் அவர்கள் ஒரு சிறிய கேமியோ செய்திருக்கும் தகவல் வைரலாகி வருகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *