ஹமாஸ் பற்றி ஐ.எஸ் அமைப்பு என்ன நினைக்கிறது?

பல ஜிஹாதிகள் மற்றும் சில தீவிர இஸ்லாமிய அமைப்புகள் ஹமாஸ் அமைப்பை நீண்ட காலமாக சந்தேகத்துடன் பார்த்து வருகின்றனர். இதற்கு ஹமாஸுக்கும் இரானுக்கும் உள்ள நெருங்கிய உறவும் ஒரு காரணம். ஆனால், ஐ.எஸ் அமைப்பு ஹமாஸ் குழுவை வெறுக்கிறது.

2018-ஆம் ஆண்டு ஜனவரி மாதம், ஐ.எஸ் அமைப்பின் வடகிழக்கு எகிப்தை மையமாகக் கொண்ட சினாய் கிளை, ஹமாஸுக்கு எதிராகப் போரை நடத்த அழைப்பு விடுக்கும் வீடியோவை வெளியிட்டபோது, இது தெளிவாகத் தெரிந்தது. இந்த வீடியோவில், அரசியல் நோக்கத்திற்காக ஹமாஸ் குழு மதத்தை நாடியதாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

இது மட்டுமின்றி, ஹமாஸ் குழு காஸாவில் ஜிஹாதிகளை ஒடுக்கியதாகவும், இரானுக்கு ஆதரவாக இருப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த அமைப்புக்கு ‘காஃபிர்’ என்று அடையாளம் கொடுக்கப்பட்டு அவர்களுக்கு எதிராகப் போராட வேண்டும் என்றும் கூறப்படிருந்தது. இந்த வீடியோவில், ஹமாஸுடன் தொடர்புடைய ஒருவரை ஐ.எஸ் கொல்வதும் காட்டப்பட்டது.

இந்த வீடியோவில் 2009-இல் ஹமாஸ் அமைப்பினர் ரஃபாவில் உள்ள மசூதிக்குள் நுழைவது போன்ற காட்சிகளும் உள்ளது. இஸ்லாமிய அமீரகத்திற்கு எதிராக போருக்கு அழைப்பு விடுத்த தீவிர ஜிகாதி மதகுரு கொல்லப்பட்டதையும் இந்த வீடியோ காட்டுகிறது.

இந்த வீடியோ வெளியான சமயத்தில், ஹமாஸ் இந்த நடவடிக்கைகளுக்காக ஆன்லைன் ஜிஹாதி சமூகத்தில் விமர்சனங்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது.

ஆனால் இதுபோன்ற பழைய புகைப்படங்களைப் பகிர்வது ஐ.எஸ் அமைப்புக்கு ஹமாஸ் குழுவுடன் இருக்கும் பழைய போட்டியைக் காட்டுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *