வானில் இடம்பெற்ற வண்ணமயமான நிகழ்வு

அமெரிக்க மாநிலம் நியுயோர்க் நகரில் மன்ஹாட்டன் பகுதியில் 843 ஏக்கர் நிலப்பரப்பில் ஐந்தாவது மிக பெரிய பூங்கா அமைந்துள்ளது.

இங்குள்ள ஏரிக்கு அருகே சனிக்கிழமை இரவு ட்ரிஃப்ட் (DRIFT) எனும் டச்சு ஸ்டூடியோ ஒன்றினால் “பிரான்சைஸ் ஃப்ரீடம்” (Franchise Freedom) எனும் பெயரில் நடத்தப்பட்ட ஒரு கண்கவர் நிகழ்வு உலகமெங்கும் பேசுபொருளாகி வருகிறது.

இந்த நிகழ்ச்சியில், இரவு வானில் 1000 டிரோன்கள் ஒரே நேரத்தில் பறக்க விடப்பட்டன. அந்த டிரோன்களை இயக்குபவர்களால் வானில் பறந்த அவை, பல கலை வடிவங்களை காண்பிக்கும்படி பறக்க விடப்பட்டன.

வானில் இடம்பெற்ற வண்ணமயமான நிகழ்வு (காணொளி) | A Colorful Phenomenon In The Sky

ஒவ்வொரு டிரோனில் இருந்தும் வரும் சிறு ஒளி ஒட்டு மொத்தமாக 1000 டிரோன்களில் இருந்து பெரும் நட்சத்திர கூட்டம் போன்று வானில் தெரிந்தது.

இந்த டிரோன்கள், வானில் பல வடிவங்களில் பறவை கூட்டம் போல் நேர்த்தியாக பறக்க விடப்பட்டது காண்போரை மிகவும் பரவசப்படுத்தியது.

“மனிதன், இயற்கை மற்றும் தொழில்நுட்பம் ஆகிய மூன்றிற்கும் இடையே உள்ள தொடர்பை ஆய்வு செய்யும் ஒரு முயற்சி இது. கவித்துவமான இந்த நிகழ்வு, மனிதர்களாக நாம் ஒரே சமூகமாக சட்டதிட்டங்களுக்கு கட்டுப்பட்டு வாழ்வதை உணர்த்துகிறது” என தங்கள் அதிகாரபூர்வ வலைதளத்தில் இந்த நிகழ்ச்சி குறித்து ட்ரிஃப்ட் அமைப்பு தெரிவித்துள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *