லியோவால் ட்ரெண்டாகும் ஹைனா!

லயன் அண்ட் தி கிங் படத்திற்கு பிறகு ஒரு திரைப்படம் மூலம் ஹைனா புகழ்பெற்றுள்ளது என்றால் அது லியோ படமாக மட்டுமே இருக்கும்.

அந்த அளவிற்கு ட்ரைலர் முதல் படம் வெளியானதில் இருந்து கழுதைப்புலி பற்றிய பல விஷயங்கள் இணையத்தில் பரவி வருகின்றன.

ஹைனாவை பற்றி ஊடகங்களும் ரசிகர்களும் ஆராயத் துவங்கிவிட்டன. இந்த பதிவில் ஹைனா பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்களை பார்க்கலாம்.

Interesting facts about hyenas
கழுதைப்புலி புத்திசாலியான வேட்டை விலங்காகும்.

இரையை கைப்பற்றுவதில் இருந்து தனது ஆண் துணையை தேர்வு செய்வது வரை அனைத்திலும் மிகவும் சாதுரியமாக செயற்படுகின்றன.

கழுதைப்புலிகளில் ஆண்களை காட்டிலும் பெண்கள் தான் பலசாலி மற்றும் தலைமை பண்பு கொண்டுள்ளன.

கழுதைப்புலியில் Spotted Hyenas எனப்படும் வகை மட்டும் சிரிப்பது போன்ற ஒரு சப்தத்தை எழுப்புகின்றன. இவை உற்சாகம் அடையும் போதும், பிற சக்திவாய்ந்த கழுதைப்புலி முன் சரணடையும் போதும் இவ்வகையிலான சத்தத்தை எழுப்புகின்றன.

கூர்மையான பற்களுடன் பார்க்க சில சமயங்களில் பெரிய வகை நாய்களை போல இருக்கும்.

கழுதைப்புலி தனித்துவமான விலங்கு குடும்பமாகவே திகழ்கின்றன. கழுதைப்புலியின் குடும்ப பெயர், Hyaenidae ஆகும்.

Striped Hyenas வகை பிற வகை கழுதைப்புலிகளுடன் ஒப்பிடுகையில் இருமடங்கு உருவத்தில் பெரியதாக இருக்குமாம்.

இவை பெரும்பாலும் அமைதியாகவே இருக்கும்.

Interesting facts about hyenas
கழுதைப்புலிகளும், சிங்கங்களும் ஒரே வகை உணவுகளுக்காக சண்டைப்போடும்.

தனக்கான உணவு அது என தெரிந்துவிட்டால், எதிரில் சிங்கமே இருந்தாலும் சண்டைக்கட்டும் முனைப்பு கழுதைப்புலிக்கு உண்டு.

ஆனால், பெரும்பாலும் சிங்கமே இந்த சண்டையில் வெற்றிபெறும். சிங்கம், ஒன்று கழுதைப்புலியை காயப்படுத்தும் அல்லது கொன்று இரையாக்கிவிடும்.

அதே சமயம், கழுதைப்புலிக்கு தனது கூட்டத்திடம் இருந்து உதவி கிடைத்து அவை ஒன்றிணைந்து விட்டால் சிங்கங்களையே விரட்டியடித்துவிட்டு இரையை கைப்பற்றிவிடும்.

கழுதைப்புலிகளுக்கு தாடை மற்றும் பற்கள் மிகவும் சக்தி வாய்ந்தவையாக அமைந்துள்ளன.

ஆகையால், ஏற்கனவே இறந்த விலங்குகளாக இருப்பினும், மீதமான எலும்புகள், பற்கள், கொம்புகள் என எவையாக இருப்பினும் உண்ணும் குணம் கொண்டுள்ளன.

கழுதைப்புலியில் ஆண்களை காட்டிலும் பெண்கள் மிகவும் ஆக்ரோஷமானவை.

வளர்ந்து கழுதைப்புலிகளில் ஆண்களை விட பெண்கள் உருவத்தில் சற்று பெரிதாக இருக்கும்.

இரை மாட்டும் போது முதலில் பெண் கழுதைப்புலிகளே சாப்பிடும். பிறகு குட்டிகள் சாப்பிடும், கடைசியாக தான் ஆண் கழுதைப்புலிகள் உணவு உண்ணும்.

அதேப்போல ஆண் குட்டிகள் வளர்ந்துவிட்டால் தனது கூட்டத்தில் இருந்து பெண் கழுதைப்புலி விரட்டிவிடுமாம் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *