உலகக் கிண்ண வரலாற்றில் அதிக தோல்விகளை சந்தித்த அணியாக இலங்கை மோசமான சாதனை!

ஒரு நாள் உலகக் கிண்ண வரலாற்றில் அதிக தோல்விகளை சந்தித்த அணி என்ற மேசமான சாதனையை இலங்கை அணி படைத்துள்ளது.

இந்த பட்டியலில் 42 தோல்விகளுடன் இலங்கை அணி முதல் இடத்தை பிடித்துள்ளது. சிம்பாவே அணி 42 தோல்விகளுடன் இரண்டாம் இடத்தில் இருக்கின்றது.

நடப்பு உலகக் கிண்ண தொடர் ஆரம்பிக்கும் முன்னர் இலங்கை அணி 39 தோல்விகளுடன் இரண்டாம் இடத்தில் இருந்தது.

எனினும் இலங்கை அணி அடுத்தடுத்து சந்தித்த தொடர் தோல்விகள் காரணமாக தற்போது முதல் இடத்தை பெற்றுள்ளது.

1975 ஆம் ஆண்டு முதல் நடப்பு உலகக் கிண்ண தொடர் வரை 83 போட்டிகளில் விளையாடியுள்ள இலங்கை அணி 38 வெற்றிகளை பதிவு செய்துள்ளது.

Photo credit – CricTracker

42 போட்டிகளில் தோல்வியும், ஒரு போட்டி சமநிலையிலும், இரண்டு போட்டிகள் முடிவின்றியும் அமைந்துள்ளன.

1983ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரையில் 57 உலகக் கிண்ண போட்டிகளில் விளையாடியுள்ள சிம்பாவே 11 போட்டிகளில் வெற்றிபெற்றுள்ளது.

எனினும், அந்த அணி 42 போட்டிகளில் தோல்வியை சந்தித்துள்ளது. இந்த பட்டியலில் மேற்கிந்திய தீவுகள் அணி 35 தோல்விகளுடன் மூன்றாம் இடத்தில் இருக்கின்றது.

1975 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரையில் 80 உலகக் கிண்ண போட்டிகளில் விளையாடியுள்ள மேற்கிந்திய தீவுகள் அணி 43 போட்டிகளில் வெற்றிபெற்றுள்ளது.

இந்த பட்டியிலில் இங்கிலாந்து அணி 34 தோல்விகளுடன் நான்காம் இடத்தை பிடித்துள்ளது.

1975 ஆம் ஆண்டு முதல் 2023 ஆம் ஆண்டு வரையில் 86 உலகக் கிண்ண போட்டிகளில் இங்கிலாந்து அணி விளையாடியுள்ளது.

இதில் 49 போட்டிகளில் வெற்றியையும், 39 போட்டிகளில் தோல்வியையும் இங்கிலாந்து அணி சந்தித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *