இஸ்ரேல் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என ஈரான் எச்சரிக்கை!.

காசா மீது இஸ்ரேல் தரைவழி தாக்குதல் நடத்தினால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என ஈரான் எச்சரித்துள்ளது.

தரைவழி தாக்குதல்

இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போரில் இருதரப்பிலும் 4,266 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளுக்கு நாள் போர் தீவிரமடைந்து வரும் நிலையில் காசா மீது இஸ்ரேல் தரைவழி தாக்குதலை தொடர உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

 

இந்த நிலையில் ஈரான் வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் இஸ்ரேலுக்கு எதிராக கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

israel-will-face-severe-consequences-iran-warning

ஈரான் எச்சரிக்கை

கத்தாரில் நடந்த அவசர பேச்சுவார்த்தையில் ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் உசேன் அமிர் அப்துல்லாயியன் ஈடுபட்டார்.

இதனைத் தொடர்ந்து அவரது கண்டன அறிக்கையில், ‘இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 1,000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்ட நிலையில், தரைவழியாக தாக்குதல் நடத்தினால் கடும் விளைவுகளை அந்நாடு சந்திக்க நேரிடும்’ என தெரிவித்துள்ளார்.

அத்துடன் வெளியுறவுத்துறையின் அறிக்கையில், ‘காசாவில் இஸ்ரேல் தரைவழி தாக்குதலை நடத்தினால், போரானது மத்திய கிழக்கு நாடுகளுக்கு பரவுதை யாராலும் கட்டுப்படுத்த முடியாது. போர் பரவுவதைத் தடுக்க விரும்புபவர்கள், காசாவில் அப்பாவி மக்கள் மீது இஸ்ரேல் நடத்தி வரும் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை தடுக்க வேண்டும்’ என கூறப்பட்டுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *