ராமருக்கும் கிரிக்கெட்டிற்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கா?

ராமருக்கும் கிரிக்கெட்டிற்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கிறதா என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார்.

காவிரி விவகாரம்

தமிழக மாவட்டம், திருச்சி நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த சீமான், “காவிரி விவகாரத்தில் ஒவ்வொரு கட்சியும் தங்களது சூழ்நிலைக்கு ஏற்றவாறு செயல்படுகின்றனர்.

சீமான் / seeman

காங்கிரஸ் மற்றும் பாஜக கட்சிகள் நாடகம் போடுகின்றன. நான் முதலமைச்சராக இருந்தால் இப்படி நாடகம் போட முடியுமா? இந்தியா தனது நாடு என்ற உரிமையை இழந்து பல நாள் ஆகிவிட்டது.

இந்தியா முழுவதும் உள்ள காங்கிரஸ் கட்சி நடத்துகிற கே.எஸ்.அழகிரியை சோனியா காந்தியால் கர்நாடகா முதலமைச்சராக்க முடியுமா? தமிழ்நாட்டில் டிஜிபி, தலைமைச்செயலாளர் பொறுப்பில் தமிழர் யாரும் இல்லை” என பேசினார்.

ராமர் & கிரிக்கெட்

மேலும் பேசிய சீமான், “நாம் வணங்கக்கூடிய தெய்வங்களை கழிவறைக்கு மட்டும் தான் இன்னும் இவர்கள் அழைத்து வரவில்லை. ராமருக்கும் கிரிக்கெட்டிற்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கா? நாட்டுப்பற்று பேச இவர்களுக்கு என்ன தகுதி இருக்கிறது.

 

இந்த நாட்டை அடிமைப்படுத்தி 400 ஆண்டுகள் ஆண்ட பிரிட்டிஷ்காரன் உனக்கு நண்பன் என்றால், விடுதலைக்காக போராடிய பாகிஸ்தான், பங்களாதேஷ் பகை என்றால், உனக்கு உளவியல் ரீதியான சிக்கல் இருக்கிறது” என்று பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *