இந்தியா- பாகிஸ்தான் மோதும் போட்டி; 14ஆயிரம் மேலதிக டிக்கெட்டுகளை வழங்கும் BCCI

உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் அதிக கவனத்தை ஈர்க்கும் மற்றும் பேசப்படும் போட்டி இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான போட்டியாகும்.

போட்டிக்கான திகதி இம்மாதம் 14ம் திகதி நடைபெறவுள்ளது.

மைதானத்தின் கொள்ளளவிற்கு அதிகமான பார்வையாளர்கள் அந்தப் போட்டியில் பங்கேற்பார்கள் என்று வர்ணனையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்தியாவின் மிகப்பெரிய மைதானங்களில் ஒன்றான அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இப்போட்டி நடைபெற உள்ளது.

இந்த மைதானத்தில் 132,000 பார்வையாளர்கள் போட்டியை கண்டுகழிக்க முடியும்.

எவ்வாறாயினும், இந்த போட்டிக்கு இன்னும் 04 நாட்கள் மீதமுள்ள நிலையில் மேலதிகமாக 14,000 டிக்கெட்டுகள் வழங்கப்படும் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை (பிசிசிஐ) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அவ்வாறாயின் 146000 பேருக்கு இந்தப் போட்டியை கண்டுகழிக்கும் வாய்ப்பு கிடைக்கும்.

இந்தியா பாகிஸ்தான் அணிகள் இதுவரை 205 போட்டிகளில் மோதியுள்ளன. அதில் பாகிஸ்தான் அணி 88 போட்டிகளிலும் இந்தியா அணி 73 போட்டிகளிலும் வெற்றிபெற்றுள்ளன. 44 போட்டிகளில் வெற்றி தோல்வியின்றி முடிவடைந்துள்ளன.

இலங்கையில் இடம்பெற்ற ஆசியக் கிண்ணப் போட்டிகளில் கடேசியாக இரு அணிகளும் மோதியிருந்தன. இந்தப் போட்டியில் இந்தியா வெற்றிப்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *