இஸ்ரேல் இசை நிகழ்ச்சி தாக்குதல் : 260 உடலங்கள் மீட்பு

இஸ்ரேல் காசா எல்லையில் உள்ள பகுதியில் இசைநிகழ்வு இடம்பெற்றுக்கொண்டிருந்தவேளை தாக்குதல் இடம்பெறும் படங்கள் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன.

குறித்த இடத்தில், 260க்கும் மேற்பட்ட உடல்கள் காணப்படுவதாக மீட்பு பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இசைநிகழ்ச்சியில் கலந்துகொண்ட நூற்றுக்கணக்கானவர்கள் தப்பியோடுவதை வீடியோக்கள் காண்பிக்கின்றன.

திறந்தவெளிகள் ஊடாக பலர் ஒடுவதையும் துப்பாக்கி சத்தம் கேட்பதையும் காணமுடிகின்றது.

இஸ்ரேல் இசை நிகழ்ச்சி தாக்குதல் : 260 உடலங்கள் மீட்பு | 260 Killed Israel Music Festival In Hamas Attack

நிலத்தில் விழுபவர்கள் துப்பாக்கி பிரயோகத்திலிருந்து தப்புவதற்காக நிலத்தில் விழுந்து படுக்கின்றார்களா அல்லது துப்பாக்கி சூட்டினால் விழுகின்றார்களா என்பது தெளிவாக தெரியவில்லை.

மக்களுடன் தப்பியோட முயலும் வாகனங்கள் மீது போராளிகள் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டதால் ஏற்பட்ட பதற்றத்தை உயிர்தப்பிய ஓர்டெல் என்பவர் வர்ணித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *