வெள்ளிப் பதக்கம் வென்ற இலங்கை அணிக்கு பண பரிசு!

இந்த ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் மகளிர் கிரிக்கெட் போட்டியில் இலங்கைக்கு வெள்ளிப் பதக்கத்தை வென்ற சாமரி அத்தபத்து தலைமையிலான இலங்கை மகளிர் கிரிக்கெட் அணிக்கு ரொக்கப் பரிசு வழங்க இலங்கை கிரிக்கெட் நிர்வாகக் குழு தீர்மானித்துள்ளது.

இதன்படி வெள்ளிப் பதக்கம் வென்ற இலங்கை அணிக்கு 50,000 அமெரிக்க டொலர்களை பரிசாக வழங்க ஶ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *