தமிழர்கள் வாழும் மலையகத்திலும் பௌத்த பேரினவாத அடக்குமுறை! – கந்தப்பளை மாடசாமி கோயிலில் பௌத்த கொடியேற்றினார் தேரர்

வடக்கு – கிழக்கு தமிழர் தாயகத்தில் மாத்திரமல்ல தமிழர்கள் வாழும் மலையகப் பகுதிகளிலும் சிங்கள – பௌத்த பேரினவாத அடக்குமுறை தொடர்கின்றது.

நுவரெலியா, கந்தப்பளை தோட்டப் பகுதியில் உள்ள காவல் தெய்வ சன்னதியில் பௌத்த விகாரை அமைக்கும் முயற்சியாக பொலிஸ் அதிகாரியின் உதவியுடன் தேரர் ஒருவரால் அங்கு பௌத்த கொடி ஏற்றப்பட்டது.

கந்தப்பளை, கோட்லொஜ் பகுதியில் உள்ள மாடசாமி காவல் தெய்வ ஆலயத்தில் பொலனறுவைப் பகுதியைச் சேர்ந்த தேரர் ஒருவரினால் இந்தப் பெளத்த கொடி ஏற்றப்பட்டது.

இதற்கு எதிராக அப்பகுதி மக்கள் இன்று கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அத்துடன், இது தொடர்பில் கந்தப்பளை பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்யப்பட்டது.

இதையடுத்து நுவரெலியா பொலிஸ் வலயப் பொலிஸ் அத்தியட்சகர், நுவரெலியா பிரதேச சபைத் தலைவர் வேலு யோகராஜ் ஆகியோர் சம்பவ இடத்துக்குச் சென்று சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் கலந்துரையாடிய பின் கொடியை அகற்றினர். இதன்பின்னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் கலைந்து சென்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *