இலங்கையின் பணவீக்கம் 1.3% ஆக குறைந்தது

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் (CCPI) அடிப்படையில் இலங்கையின் ஒட்டுமொத்த பணவீக்க செப்டெம்பர் மாதத்தில் 1.3% ஆகக் குறைந்துள்ளதாக மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, நாட்டின் ஒட்டுமொத்த பணவீக்கம், ஆகஸ்ட் மாத்தில் 4.0% இலிருந்து செப்டெம்பர் மாதத்தில் 1.3% ஆகவும், உணவுப் பணவீக்கம் -5.2% இல் இருந்து -4.8% ஆகவும் குறைந்துள்ளது.

இதற்கிடையில், உணவு அல்லாத குழுக்களின் பணவீக்கம் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் 8.7% ஆக இருந்த நிலையில் 4.7% ஆக குறைந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *