இலங்கையில் தனிநபர் கடன் அதிகரிப்பு தாக்கம் செலுத்தும் ரூபாவின் பெறுமதி!

 

இலங்கையில் நான்கு பேர் கொண்ட குடும்பத்தின் கடன் சுமை 47 இலட்சம் ரூபாவைத் தாண்டியுள்ளதாக பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரப் பிரிவு நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

தனிநபர் கடன் அதிகரிப்பு
ஆய்வின் படி ஒருவருடைய கடன் சுமார் 7 இலட்சம் ரூபாவை அண்மித்துள்ளதாக பொருளாதார திணைக்களத்தின் பேராசிரியர் வசந்த அத்துகோரள தெரிவித்தார்.

ஏப்ரல் 2022 முதல் ஏப்ரல் 2023 வரை, நாட்டில் உள்ள ஒவ்வொரு நபரும் கிட்டத்தட்ட 1 லட்சத்து 30,000 ரூபாய் கடன்பட்டுள்ளனர்.

அரசாங்கம் வெளிநாடுகளில் இருந்து கடன் வாங்குவதும் ரூபாயின் பெறுமதி வீழ்ச்சியும் தனிநபர் கடன் அதிகரிப்புக்கு முதன்மைக் காரணம் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *