அண்டார்டிகாவில் அதிவேகமாக உருகும் பனி

அண்டார்டிகாவைச் சுற்றியுள்ள கடல் பகுதியில் இருக்கும் பனி, இதற்கு முந்தைய குளிர் காலத்தில் இருந்ததை விட மிகவும் குறைவாக உள்ளது என்பதை செயற்கைக்கோள் படம் காட்டுகிறது.

ஒரு காலத்தில் புவி வெப்பமடைதலைத் தடுக்கும் விதத்தில் இருந்த ஒரு பகுதி குறித்த கவலையளிக்கும் தகவலாக இது பார்க்கப்படுகிறது.

ஒரு நிலையற்ற அண்டார்டிகா பனிக்கண்டம், நீண்ட கால அடிப்படையில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் ஆபத்து அதிகரித்திருப்பதாக துருவப் பகுதிகள் குறித்து ஆய்வு செய்யும் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

அண்டார்டிகாவின் மிகப்பெரிய பனிக்கட்டி, பூமியின் வெப்பநிலையை ஒழுங்குபடுத்திவருகிறது.

ஏனெனில் அதில் உள்ள வெண்மையான மேற்பரப்பு சூரியனின் ஆற்றலை மீண்டும் வளிமண்டலத்திற்குப் பிரதிபலிக்கிறது என்பதுடன் அதன் கீழும், அருகிலும் உள்ள தண்ணீரை குளிர்வித்துக்கொண்டிருக்கிறது.

அண்டார்டிகா கண்டத்தில் உள்ள பனி, பூமியைக் குளிர்விக்க முடியாமல் போனால், அக்கண்டம் பூமியின் குளிர்சாதன பெட்டி என்ற நிலையில் இருந்து மாற்றமடைந்து, பூமியின் ரேடியேட்டராக மாறக்கூடும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

அண்டார்டிக் பெருங்கடலின் மேற்பரப்பில் மிதக்கும் பனிக்கட்டி இப்போது 17 மில்லியன் சதுர கிலோமீட்டருக்கும் குறைவாகவே உள்ளது. அதாவது செப்டம்பர் மாத சராசரியை விட 1.5 மில்லியன் சதுர கிலோ மீட்டர் பனி குறைவாக உள்ளது.

மேலும் முந்தைய குளிர்காலத்திலேயே மிகவும் குறைந்த அளவு இருந்தாலும், அதைவிட தற்போது குறைவாக உள்ளது.

இது பிரிட்டிஷ் தீவுகளை விட ஐந்து மடங்கு பெரிய பனிக்கட்டியின் ஒரு பகுதி என்பது கவனிக்கத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *