சீனாவில் கடந்த 28 ஆண்டுகள் இல்லாத அளவில் உள்நாட்டு உற்பத்தி கடுமையாக சரிந்தது

கொரோனா எதிரொலியாக, கடந்த 28 ஆண்டுகளில் இல்லாத அளவில் சீனாவின் உள்நாட்டு உற்பத்தி விகிதம் கடுமையாக சரிந்துள்ளது. சீனாவில் முதன் முதலாக கொரோனா வைரசின் அறிகுறி கடந்த ஆண்டு டிச.1-ம் தேதி  கண்டறியப்பட்டு தற்போது 209 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக அமெரிக்கா, ஈரான், இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகள் கொரோனா தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

இருப்பினும், கொரோனாவால் முதலில் பாதிக்கப்பட்ட சீனா தற்போது இயல்பு நிலைக்கு திரும்பிவிட்டது. அந்நாட்டில் மூடப்பட்டிருந்த சிறு மற்றும் குறு தொழில் நிறுவனங்கள் 84 சதவீதத்திற்கு மேல் தற்போது திறக்கப்பட்டுள்ளது. அவற்றில்  உற்பத்தி விரைவில் தொடங்கும் என்று அந்நாட்டு அதிகாரிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். இதற்கிடையே, கொரோனா வைரசால் உலகளவில் பெரும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், ஜனவரி முதல் மார்ச் வரையிலான  காலாண்டில் சீனாவின் உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 6.8 சதவீதம் சரிந்துள்ளது.

கடந்த 28 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இந்த சரிவு கருதப்படுகிறது. கடந்த இருபது ஆண்டுகளாக சீனாவின் பொருளாதார வளர்ச்சி ஆண்டுக்கு 9 சதவீதம் அளவில் இருந்தது. தற்போது தொழில் நிறுவனங்கள் முற்றிலும் முடக்கத்தைச்  சந்தித்துள்ள நிலையில் அதன் உள்நாட்டு வளர்ச்சி கடுமையாகச் சரிந்துள்ளது. ஜனவரி முதல் மார்ச் வரையிலான சீனாவின் நடப்பு நிதி ஆண்டின் முதலாம் காலாண்டு ஜிடிபி வளர்ச்சி, முந்தைய நிதி ஆண்டின் இதே காலகட்டத்துடன்  ஒப்பிடுகையில் 6.8 சதவீதம் சரிந்துள்ளது. பொருளாதார அளவில் உலகின் இரண்டாவது பெரிய நாடாக திகழ்ந்து வரும் சீனாவின் வளர்ச்சி பெரும் சரிவுக்கு உள்ளாகியிருப்பது, பிற நாடுகளிடையே கடும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இருப்பினும், நேற்று செய்தியாளர்களிடம் பேட்டியளித்த ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்ததாஸ், ஐஎம்எஃப், பொருளாதார வளர்ச்சி 1.89 % ஆக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளதாகவும், ஜி20 நாடுகளின் பொருளாதார வளர்ச்சி கணிப்போடு  ஒப்பிட்டால் 1.89 % என்பதே அதிகம். அடுத்த நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி 7.4 சதவீதமாக உயரும் என கணிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். பொருளாதார வளர்ச்சி 1.9% மாக மதிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *