பணத்துக்காக தந்தைக்கு மனைவியான மகள்!

பெண் ஒருவர் தனது தந்தையில் ஓய்வூதிய பணத்தை போலி சான்றிதழ் மூலம் மனைவி என்று கூறி சுமார் 10 ஆண்டுகளாக பெற்றுவந்துள்ளார்.
மோக்‌ஷினா என்ற பெண் புதிய வியூகத்தை கையாண்டு காவல்துறையிடம் சிக்கி உள்ளார். பண மோசடி செய்ய இவர் கையாண்ட விதம் தாம் அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது. சொந்த தந்தைக்கு மனைவியாக மாறுவேடமிட்டு, சான்றிதழ்களை தயார் செய்து, தந்தையின் ஓய்வூதிய பணத்தை 10 ஆண்டுகளாக வாங்கி வந்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.
2017 ஆம் ஆண்டு மோக்‌ஷினா, ஃபரூக் அலி என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால், இவர்களது திருமண பந்தம் வெகுநாள் தொடரவில்லை. இந்த உறவு முறிவுக்குப் பின், ஃபரூக் அளித்த தகவல்களின் அடிப்படையில் தான் காவல்துறை விசாரணை நடத்தி மோக்‌ஷினாவை கைது செய்துள்ளனர்.இது குறித்து காவல்துறை தகவல் வெளியிட்டுள்ளது.
அதன்படி, வருவாய் துறையில் வாஜாஹத் உல்லா கான் என்பவர் பணிபுரிந்து ஓய்வுபெற்ற நிலையில், 2013ஆம் ஆண்டில் ஜனவரி 2 தேதி அன்று இயற்கை எய்தினார். இவரைத் தொடர்ந்து மனைவி சபியா பீகமும் சில ஆண்டுகளில் மரணம் அடைந்தார். இவர்களது மகள் மோக்‌ஷினா பர்வேஸ் 2017-இல் திருமணமாகி உத்திரப் பிரதேச மாநிலம் எட்டா மாவட்டத்திலுள்ள அலிகஞ்ச் பகுதியில் வசித்து வந்தார். இவர் கணவர் ஃபரூக் அலியுடன் ஏற்பட்ட மணமுறிவு காரணமாக தற்போது தனியாக இருந்து வந்தார்.
இந்த நிலையில், தான் கணவர் ஃபரூக் காவல்துறையில் தன் மனைவி மீது புகார் அளித்தார். அந்த புகாரில், கடந்த 10 வருடங்களாக தந்தையின் ஓய்வூதிய பணத்தை, தாய் பெயரில் தனது மனைவி வாங்கி வருவதாகத் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஒரு வருடத்திற்கு முன் தான் மனைவியை பிரிந்த ஃபரூக், 10 ஆண்டுகளாக நடந்த இந்த மோசடியை வெளியே சொல்லாமல் இருந்து வந்துள்ளார். வழக்கு மீது காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அதில் மோக்‌ஷினா குற்றம் செய்ததற்கான சாத்தியங்கள் இருந்ததால் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.
மேற்கொண்ட விசாரணையில், மோக்‌ஷினா தனது தாயைப் போல ஆள்மாறாட்டம் செய்து, சான்றிதழ்களைத் திருத்தி தந்தையின் ஓய்வூதிய பணத்தை பத்து ஆண்டுகளாகப் பெற்று வந்துள்ளார். இதுவரை இவர் 12 லட்ச ரூபாய் வரை மோசடி செய்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. சம்பவத்தில் வேறு யாருக்கேனும் தொடர்பு இருந்தால், அவர்களும் விசாரணை வளையத்துக்குள் கொண்டுவரப்படுவர் என காவல்துறை அலுவலர்கள் உறுதிபட தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *