பாட்டியுடன் ரகசிய உறவு மறைந்த ஷேன் வோர்ன் குறித்து வெளிவந்த அதிர்ச்சி தகவல்!

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் மறைந்த ஜாம்பவான் ஷேன் வார்னே 51 வயது பெண்ணுடன் உறவில் இருந்ததாக பரபரப்பான தகவல் வெளியாகியுள்ளது.

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் ஜாம்பவானான ஷேன் வார்னே 1969 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் பிறந்தவர். இவருக்கு சிறு வயது முதலே கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டு விளங்கினார்.

1992 ஆம் ஆண்டு இந்திய அணிக்கு எதிராக தனது முதல் டெஸ்ட் போட்டியில் களமிறங்கி பின்பு கிரிக்கெட் உலகில் உச்சத்திற்கு சென்றார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு, ஷேன் வார்னே மாரடைப்பால் காலமான சம்பவம் கிரிக்கெட் உலகில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

இந்த நிலையில், தற்போது ஷேன் வார்னே பற்றி ஒரு பரபரப்பான தகவல் வெளியாகியுள்ளது. அவை, உலகின் கவர்ச்சியான பாட்டி என இணையத்தில் பிரபலமாக உள்ள 51 வயதுடைய ஜினா ஸ்டீவர்ட் (Gina Stewart) என்பவர் ஷேன் வார்னே தன்னுடன் உறவில் இருந்து வந்ததாகவும் ஊர் சுற்றியதாகவும் அவர் பேசியுள்ள தகவல் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து ஜினா தெரிவிக்கையில், ஷேன் வார்னே கோல்ட் கோஸ்ட் பகுதிக்கு வந்தபோது, நாங்கள் சந் தித்துக்கொண்டோம். அதன் பின்னர் பழகியதும் இரவு முழுவதும் ஒன்றாக பேசி ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டோம்.

பின் நெருக்கமான உறவில் இருந்து வந்தோம். தொடர்ந்து உறவில் இருந்து வந்தாலும், அவர் இதுகுறித்து யாரிடமும் கூற கூடாது என கேட்டுக்கொண்டார். அதனை நானும் ஏற்று கொண்டேன்.

ஊர் சுற்றி வந்தோம்

ஆனால் நாங்கள் ஒன்றாக இருந்த நேரத்தில் பல ஊடகங்கள் எங்களை புகைப்படம் எடுத்தன. அதனால் நாங்கள் இருவரும் மாறு வேடத்தில் ஊர் முழுக்க சுற்றி வந்தோம்.

மேலும், அவர் தாய் லாந்துக்கு செல்லும் முன் அவரிடம் பேசினேன். அப்போது தன்னுடன் பேசுவதால் நிம்மதியாக இருப்பதாகவும், மகிழ்ச்சியில் இருப்பதாகவும் வார்னே அடிக்கடி என்னிடம் கூறியுள்ளார். ஆனால் தற்போது அவர் பாதிலேயே விட்டு சென்றுவிட்டார் என பரபரப்பு தகவலை தெரிவித்துள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *