விபச்சார தொழிலை விடச் சொன்ன கணவனை துண்டு துண்டாக வெட்டி கொலை செய்த மனைவி!

தொட்டில் பழக்கம் சுடுகாடு வரைக்கும்… என்பதற்கேற்ப கணவர் உறவு வந்தாலும், பழக்கதோஷமான பாலியல் தொழிலை அவர் கைவிடவில்லை. திருச்சி: விழுப்புரம் மாவட்டத்தை பூர்வீகமாக கொண்டவர் ஜெயந்தன் (வயது 28). என்ஜினீயரிங் பட்டதாரியான இவர் சென்னை நங்கநல்லூரில் வசித்து வரும் தனது சகோதரி ஜெயக்கிருபா வீட்டில் தங்கி மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இயங்கி வரும் வெளிநாட்டு விமான நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.

இதற்கிடையே கடந்த மாதம் கடந்த 18-ஆம் திகதி பணியை முடித்துவிட்டு, சொந்த ஊரான விழுப்புரம் சென்றுவிட்டு வருவதாக சகோதரியிடம் கூறிச்சென்ற ஜெயந்தன் அதன்பிறகு திரும்பவில்லை. அவரது செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த ஜெயக்கிருபா, சொந்த ஊருக்கும், பணி செய்யும் இடத்திலும் விசாரித்தபோது அவர் வரவில்லை என்ற தகவல் கிடைத்தது. பதட்டம் அடைந்த ஜெயக்கிருபா தம்பியை காணவில்லை என்று சென்னை பழவந்தாங்கல் போலீசில் புகார் அளித்தார்.

அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான ஜெயந்தனை தேடி வந்தனர். அப்போது ஜெயந்தனின் செல்போன் சிக்னலை ஆய்வு செய்தனர். அப்போது அது கடைசியாக புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகேயுள்ள செம்மாளப்பட்டி கிராமத்தை காட்டியது.

உடனே சுதாரித்துக்கொண்ட போலீசார் கடந்த 1-ந்தேதி புதுக்கோட்டை விரைந்தனர். சிக்னல் அடையாளம் காணப்பட்ட வீட்டில் இருந்த பாக்கியலட்சுமி (38) என்ற பெண்ணை பிடித்து விசாரித்தனர். முதலில் அப்படியொரு நபரை தனக்கு தெரியாது என்று மறுத்த பாக்கிலட்சுமி, உளறல் பேச்சால் மாட்டிக்கொண்டார். உரிய முறையில் விசாரித்தபோது, விமான நிலைய ஊழியர் ஜெயந்தனை தான் கொலை செய்துவிட்டதாகவும், பின்னர் உடலை துண்டு துண்டாக வெட்டி சென்னை கோவளம் கடற்கரையில் புதைத்துவிட்டதாகவும் கூறியதை கேட்டு போலீசாருக்கே தலைசுற்றியது.

அதாவது புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த பாக்கியலட்சுமிக்கு திருமணமாகி அவரது நடத்தை சந்தேகத்தில் கருத்து வேறுபாட்டால் கணவர் பிரிந்து சென்றுவிட்டார். இந்த தம்பதிக்கு 19 வயதில் ஒரு மகன் இருக்கிறார். தோற்றத்தில் அழகு, மயக்கும் பேச்சு ஆகியவற்றை வீணாக்க விரும்பாத பாக்கியலட்சுமி, மகனை உறவினர் பொறுப்பில் விட்டுவிட்டு தலைநகர் சென்னை சென்றார். அங்கு முதலில் தான் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்ப்பதாக கூறி வாடகைக்கு ஒரு வீட்டை பிடித்தார். பகலில் பாலியல் தொழில், இரவில் வீட்டில் தஞ்சம் என்றிருந்தபோது, விமான நிலையத்தில் பணியாற்றிய ஜெயந்தன் பாக்கியலட்சுமியை பார்த்துள்ளார். அவரது அழகில் மயங்கிய ஜெயந்தன், ஒட்டிக்கொள்வதை விட கட்டிக்கொள்வதே மேல் என்ற முடிவுக்கு வந்தார்.

இதுபற்றி தனது குடும்பத்தாரிடம் கூறினால் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் எனக்கருதி, கடந்த 2020-ல் விழுப்புரம் மாவட்டம் மயிலம் முருகன் கோவிலில் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டு பாக்கியலட்சுமியை மனைவியாக்கினார். தொட்டில் பழக்கம் சுடுகாடு வரைக்கும்… என்பதற்கேற்ப கணவர் உறவு வந்தாலும், பழக்கதோஷமான பாலியல் தொழிலை அவர் கைவிடவில்லை. கணவரை வேலைக்கு அனுப்பி வைத்து விட்டு விபசார தொழிலுக்கு செல்லும் விஷயம் ஜெயந்தனுக்கு தெரிந்து அதிர்ச்சி அடைந்தார். இதில் ஏற்பட்ட தகராறில் கடந்த 2021-ல் ஜெயந்தனை பிரிந்த பாக்கியலட்சுமி முழுநேர பாலியல் தொழிலாளியானார். இருந்தபோதிலும், அவரை எப்படியாவது திருத்தி தன்னுடன் குடும்பம் நடத்த வைக்க வேண்டும் என்ற முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்ட ஜெயந்தன் அதற்கான முயற்சிகளில் இறங்கினார்.

அதன்படி பாக்கியலட்சுமி புதுக்கோட்டை சென்றிருப்பதை அறிந்து, கடந்த மாதம் 18-ந்தேதி அவரை தேடிச்சென்றார். அப்போதுதான் அவருக்கு திருமணமாகி, 19 வயதில் மகன் இருப்பதே தெரிந்தது. இப்படியொரு மோசக்காரியிடம் வாழ்வை தொலைத்து விட்டோமே என்று மனம் நொந்த ஜெயந்தன் அவரை கண்டித்தார். இதில் ஏற்பட்ட தகராறில் ஜெயந்தனை பாக்கியலட்சுமி அடித்து கொலை செய்தார். பாழாய்போன பாலியல் தொழிலை துணிந்து செய்த பாக்கியலட்சுமிக்கு கொலையை மறைப்பதும் பெரிதாக தெரியவில்லை. தனக்கு உதவியாக புதுக்கோட்டையை சேர்ந்த சங்கர் மற்றும் கோவளம் பகுதியை சேர்ந்த பூசாரி வேல்முருகன் ஆகியோரை அழைத்துக்கொண்டார்.

கொலையான ஜெயந்தனின் உடலை கறியை வெட்டுவது போல் முதலில் கை, கால்களை தனியாக எடுத்துக் கொண்டார். பின்னர் அதனை பிளாஸ்டிக் பைகளில் வைத்து, தைரியமாக அரசு பஸ்சில் ஏறி பயணம் செய்து கோவளத்தை அடைந்தார். அங்குள்ள கடற்கரையில் ஒதுக்குப்புறமான இடத்தில் புதைத்தார். சில நாட்கள் தன்னை யாரேனும் நோட்டமிடுகிறார்களா என்பதை கவனித்தார். யாருக்கும் சந்தேகம் வராததால் மீண்டும் புதுக்கோட்டை வந்து, மீதமிருந்த தலை மற்றும் உடல் பாகங்களை ஒரு சூட்கேசில் வைத்து அடைத்து, வாடகைக்கு ஒரு காரை பிடித்துக்கொண்டு கோவளம் சென்று அதே பகுதியில் புதைத்தார். தன்னைவிட 10 வயது மூத்தவரான பாக்கியலட்சுமியை முதல் பார்வையிலேயே மனைவியாக்க விரும்பி திருமணம் செய்து கொண்டவரை சற்றும் ஈவு இரக்கமின்றி கொடூரமாக கொலை செய்த பாக்கியலட்சுமியின் நடவடிக்கை மற்றும் வாக்குமூலத்தால் போலீசார் உறைந்து போனார்கள்.

இதையடுத்து அவரை கைது செய்து பழவந்தாங்கல் அழைத்து சென்ற போலீசார், மருத்துவக்குழுவினர் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் முன்னிலையில் இன்று பாக்கியலட்சுமி புதைத்த இடத்தில் இருந்து ஜெயந்தனின் உடலை தோண்டி எடுக்க முடிவு செய்துள்ளனர். அதேபோல் இந்த கொடூர கொலைக்கு உடந்தையாக இருந்த சங்கர், பூசாரி வேல்முருகன் ஆகியோரை பிடிக்கவும் போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். அழகு எப்போதுமே ஆபத்து என்பதற்கு சென்னை விமான நிலைய ஊழியரின் சினிமாவை மிஞ்சும் கொலை சம்பவம் ஒரு பாடமாக அமைந்துள்ளதை யாரும் மறுக்கமுடியாது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *