இலங்கை, இந்திய சமுதாயப் பேரவையின் புதிய தலைவராக ஜீவன் தொண்டமான் தெரிவு

இலங்கை, இந்திய சமுதாயப் பேரவையின் புதிய தலைவராக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இலங்கை, இந்தியாவுக்கிடையிலான வர்த்தக மற்றும் கலாசார ரீதியிலான நகர்வுகளுக்கான உறவு பாலமாக திகழும் முக்கிய அமைப்பே இதுவாகும்.

இலங்கை,  இந்திய சமுதாயப் பேரவையின் முன்னாள் தலைவர் சிவராமன் மற்றும் பேரவையின் உயர்மட்ட உறுப்பினர்களால் விடுக்கப்பட்ட அழைப்பின் பிரகாரமே தலைமைப்பதவியை அமைச்சர் ஜீவன் தொண்டமான் ஏற்றுள்ளார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான கலாசார, வர்த்தக தொடர்புகளை மேலும் விரிவாக்குவது, இளம் தொழில் அதிபர்களை உருவாக்குவது மற்றும் இளம் தொழில் முனைவோரை அடையாளம் காணும்போது மலையகத்தில் உள்ள தொழில் முனைவோருக்கு முக்கியத்துவம் அளித்தல் உள்ளிட்ட விடயங்கள் பற்றி இலங்கை,  இந்திய சமுதாயப் பேரவையின் கலந்துரையாடலில் ஆராயப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *