அமைச்சுகளுக்கிடையிலான ஒத்துழைப்பை வளர்க்க புதிய இணையவழி திட்டம்!!

 

ஒப்பந்தங்கள் மற்றும் புரிந்துணர்வு செயற்பாடுகளை செயற்றிறனுடன் நிர்வகிப்பதற்காகவும் அமைச்சுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பை வளர்ப்பதற்காகவும் புதிய இணைய வழிமூல திட்டத்தினை ஆரம்பிப்பதற்கான கலந்துரையாடல் வெளிவிவகார அமைச்சில் இன்று (28) இடம்பெற்றது.

வெளிவிவகார அமைச்சின் நடப்பு செயற்பாடுகள் மற்றும் எதிர்காலத்தில் வரவிருக்கும் பலதரப்பு ஒப்பந்தங்கள், புரிந்துணர்வு திட்டங்கள் போன்றவற்றினை செயற்றிறனுடன் நிர்வகிப்பதற்காகவும் அமைச்சுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பை வளர்ப்பதற்காகவும் இந்த புதிய இணைய வழிமூல வசதிகள் வடிவமைக்கப்பட்டு, ஆரம்பம் செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

பன்முகத்தன்மை கொண்ட இந்த முயற்சியானது ஒப்பந்தங்கள் மற்றும் புரிந்துணர்வு செயற்பாடுகள் தொடர்பான பின்தொடர்தல் மற்றும் கண்காணிப்பு போன்றவற்றின் வினைத்திறனான செயற்றிறன்களை மதிப்பீடு செய்து அவற்றை இணையவழி ஊடக பேணுவதற்கு வசதியாக அமையும். அத்துடன் நேர விரயங்களைத் தவிர்த்து பயனுள்ள வினைத்திறனான குறைவான ஆளானி செயற்பாடுகளுடன் வேலைகளை திறம்பட செய்வதற்கும் இவ் இணையவழி திட்டமானது பயனளிக்கும்.

வெளிவிவாகர அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.யூ.எம். அலி சப்ரி தலைமையில் இடம்பெற்ற இக் கலந்துரையாடலில் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய உட்பட ஏனைய அமைச்சுக்களைப் பிரதிநிதித்துவப்படுத்திய உயர் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *