1 மணி நேரம் மட்டுமே வேலை… ஆனால் 150000 Dollar சம்பளம்:

நாள் ஒன்றுக்கு 1 மணி நேரம் மட்டும் வேலை பார்க்கும் கூகுள் நிறுவன பொறியாளர் ஒருவர் சுமார் 150,000 அமெரிக்க டொலரை வருமானமாக ஈட்டுகிறார்.

கூகுளின் Gen Z மென்பொருள் பொறியாளரான டெவோன் தான் நாள் ஒன்றுக்கு 1 மணி நேரம் மட்டுமே பணி புரிந்து ஆண்டுக்கு சுமார்  (அதாவது $ 150,000 அமெரிக்க டொலர்) வருமானமாக பெறுவதாக தெரிவித்துள்ளார்.

அத்துடன் இவர் தொழில்நுட்ப பொறியாளருக்கான அறிமுக போனஸையும் கூகுள் நிறுவனத்திடம் இருந்து பெற்றுள்ளார், அத்துடன் ஆண்டு இறுதிப் போனஸை எதிர்பார்த்து காத்துக் கொண்டுள்ளார்.
கூகுள் நிறுவனத்திற்காக கணினி குறியீடு (கோடிங்) எழுதுவது தற்போது தன்னுடைய வேலையாக உள்ளது என டெவோன் தெரிவித்துள்ளார்.

மேலும் இவர் தன்னுடைய ஆர்வத்தை தூண்டும் செயல்களில் தன்னுடைய மூளையை உபயோகிப்பதாகவும், சக தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் நண்பர்களுடன் இணைந்து நிறுவனம் ஒன்றை உருவாக்கி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

தான் வழக்கமாக காலை 11 மணி அல்லது மதியம் தான் தனது வேலையில் அமர்வதாகவும், வேலையே செய்யாமல் அதிக ஊதியம் பெறும் தொழில்நுட்ப ஊழியர்களில் தானும் ஒருவன் என எண்ணிக் கொள்வதாக டெவோன் குறிப்பிட்டுள்ளார்.

தொழில்நுட்ப ஊழியர்களை பொறுத்தவரை பணியாற்றுவதற்கு கூகுளை பணியாற்றுவதற்கு சிறந்த நிறுவனமாக கருதுகின்றனர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *