ஒரே பாடசாலையில் ஒரே நேரத்தில் சேர்க்கைப் பெற்ற 17 இரட்டை ஜோடி குழந்தைகள்!

ஸ்காட்லாந்தில் ஒரு மழலையர் பள்ளியில் 17 ஜோடி இரட்டைக் குழந்தைகள் ஒரே நேரத்தில் சேர்க்கை பெற்றுள்ளனர்.

பிரித்தானியாவின் ஸ்காட்லாந்து பகுதியில் இன்வெர்கிளைட் மாவட்டத்தில் இரட்டை பிறப்பு விகிதம் அதிகமாக உள்ளது. அதனால் இன்வெர்க்ளைட் (Inverclyde) மாவட்டம் ட்வின்வர்க்ளைட் (Twinverclyde) என்று அழைக்கப்படுகிறது.

இம்மாவட்டத்தில் 2015-ஆம் ஆண்டு ஒரே பள்ளியில் 19 ஜோடி இரட்டைக் குழந்தைகள் ஒரே நேரத்தில் சேர்க்கை பெற்றது ஊடகங்களின் கவனத்தை ஈர்த்தது.

சமீபத்தில், இன்வெர்க்லைட் மாவட்டத்தில் உள்ள கிரீனாக் நகரில் உள்ள செயின்ட் பேட்ரிக் (St Patrick) ஆரம்பப் பள்ளியில் 17 ஜோடி இரட்டையர்கள் ஒரே நேரத்தில் சேர்க்கை பெற்றனர். 14 ஜோடி இரட்டையர்கள் ஒன்றாக அமர்ந்திருக்கும் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

2013-ஆம் ஆண்டிலிருந்து ஸ்காட்லாந்தின் இன்வெர்க்லைட் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆரம்பப் பள்ளிகளிலும் மொத்தம் 147 ஜோடி இரட்டையர்கள் இதுவரை சேர்க்கை பெற்றுள்ளனர். அதாவது ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 13 ஜோடி இரட்டையர்கள்.

சமீபத்தில் மேலும் 17 இரட்டைக் குழந்தைகள் St Patrick பள்ளியில் சேர்க்கை பெற்ற நிலையில், இந்த எண்ணிக்கை மேலும் அதிகரித்தது.

இன்வெர்கிளைட் மாவட்டத்தில் உள்ள அர்டகோவன் தொடக்கப் பள்ளிதான் (Ardgowan Primary) அதிக இரட்டைக் குழந்தைகளைக் கொண்டுள்ளது. இந்தப் பள்ளியில் ஒவ்வொரு தொடக்க வகுப்பிலும் சராசரியாக 3 ஜோடி இரட்டைக் குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில், ஒவ்வொரு ஆண்டும் புதிதாக சேர்க்கப்படும் இரட்டையர்களை (17 செட் இரட்டையர்கள்) அழைக்க பள்ளிகளில் சிறப்பு கொண்டாட்டங்கள் ஏற்பாடு செய்யப்படுகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *