கன்னித்தன்மையை விற்பனைக்கு விட்ட இளம் பெண்!

கன்னித்தன்மையை விற்பனைக்கு வைக்கும் சுவிஸ் இளம்பெண்!

சுவிட்சர்லாந்தின் துகாவ் மண்டலத்தில் இளம்பெண் ஒருவர் தமது கன்னித்தன்மையை விற்பனைக்கு வைத்துள்ளார்.

துர்காவ் மண்டலத்தில் குடியிருக்கும் 20 வயது இளம்பெண்ணே 100,000 பிராங்குகளுக்கு தமது கன்னித்தன்மையை விற்க முடிவு செய்துள்ளார்.

விபத்து ஒன்றில் சிக்கியதன் பின்னர் தம்மால் வேலைக்கு செல்ல முடியாமல் போனது என கூறும் அவர்,

தமது பெற்றோரை கவனிக்கும் பொறுப்பு தமக்கிருப்பதால், இதைத் தவிர வேறு வழி தெரியவில்லை என்கிறார்.

குறைந்தபட்ச கட்டணம் 100,000 பிராங்குகள் என குறிப்பிட்டுள்ள அவர், தமது விருப்பத்தை பிரபலமான இணையதளம் ஒன்றில் புகைப்படங்களுடன் பதிவு செய்துள்ளார்.

அதில் தாம் கன்னித்தன்மையுடன் இருப்பதாக மருத்துவர் அளித்த சான்றிதழும், அங்க அடையாளங்களும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதிக தொகை செலுத்துபவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என அந்த இணைய பக்கத்தில் கூறப்பட்டுள்ளது.

ஆனால் உண்மையில் சுவிஸ் இளம்பெண் தமது கன்னித்தன்மையை விற்பனைக்கு வைத்துள்ளாரா என்ற கேள்விக்கு,

இதே துறையில் செயல்படும் நபர்கள் சந்தேகம் எழுப்பியுள்ளனர். சுவிட்சர்லாந்தில் தங்கள் கிளையை பரப்ப, குறித்த நிறுவனம் பொய்யான விளம்பரங்களை வெளியிட வாய்ப்பிருப்பதாக கூறுகின்றனர்.

இருப்பினும் சுவிஸ் இளம்பெண்ணின் விளம்பரத்தை வெளியிட்ட குறிப்பிட்ட நிறுவனம், தாங்கள் பொய் விளம்பரம் செய்யவில்லை எனவும்,

இதுவரை சுவிஸில் இருந்து மட்டும் நூறுக்கும் குறைவான இளம்பெண்கள் தங்களை சமீபித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

மேலும், தங்கள் இணைய பக்கத்தில் லண்டனில் இருந்து மட்டும் 3,000 இளம்பெண்கள் பதிவு செய்துள்ளதாகவும் அந்த நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதனிடையே உள்ளூர் பத்திரிகை ஒன்று, குறித்த சுவிஸ் இளம்பெண்ணை தொடர்பு கொண்டு கன்னித்தன்மை விற்பனைத் தகவலை உறுதி செய்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *