வெள்ளி கிரகத்திற்கு ஆயிரம் பேரை அனுப்ப திட்டம்!

2050 ஆம் ஆண்டுக்குள் முதற்கட்டமாக ஆயிரம் பேரை வெள்ளி கிரகத்திற்கு அனுப்பி வைக்க திட்டமிட்டுள்ளதாகவும் டைட்டன் நிறுவனம் தெரிவித்துளடளது.

வெள்ளி கிரகத்தில் மனிதர்களின் குடியேற்றம் அமைக்கப்படும் என்பதனால் இந்த திட்டத்தை அமுல்படுத்த நடவடிக்கை எடுக்க்பபட்டுள்ளது.

ஏற்கனவே டைட்டானிக் கப்பலை பார்வையிட சென்ற டைட்டன் நீர்மூழ்கிக் கப்பல் வெடித்து சிதறியதில் ஐந்து பேர் பலியானதாக அறிவிக்கப்பட்டது.

இது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விபத்து நடந்து ஒரு மாதம் மட்டுமே ஆகியுள்ள நிலையில், டைட்டன் நிறுவனம் தங்களின் அடுத்தகட்ட திட்டத்தை அறிவித்துள்ளது.

அதற்கமைய, 2050 ஆம் ஆண்டுக்குள் வெள்ளி கிரகத்தில் மனிதர்களை குடியேற்றப் போவதாகவும். அதற்காக ஆயிரம் பேரை அனுப்பி வைக்க திட்டமிட்டு இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

இந்த அறிவிப்பு அனைவரையும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. வெள்ளி கிரகத்தில் மனிதர்களைக் குடியேற்றுவது ஓசியன் கேட் நிறுவனத்தின் கனவுத்திட்டம் என்று அதன் இணை நிறுவனர் தெரிவித்துள்ளார்.

இந்தத் திட்டத்திற்கு ‘ஹியூமன்ஸ் டு வீனஸ்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. மேலும் அந்த கிரகத்தில் மனிதர்கள் வாழ்வதற்கான நிரந்தர சூழல் உருவாக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *