முத்தத்தால் ஏற்பட்ட விபரீதம் இரத்த செய்யப்பட்ட இசை நிகழ்ச்சி!

மலேசியாவில் முத்தத்தால் இசை நிகழ்ச்சி ஒன்று இரத்துச் செய்யப்பட்டுள்ளது.

மலேசியாவில் வாரயிறுதி நடைபெறவிருந்த Good Vibes இசை நிகழ்ச்சியே இவ்வாறு இரத்துச் செய்யப்பட்டுள்ளது.

பிரித்தானியாவை சேர்ந்த The 1975 என்ற இசைக் குழுவின் முன்னணிப் பாடகர் மலேசியாவின் ஓரினச் சேர்க்கைக்கு எதிரான சட்டத்தைக் குறைகூறியுள்ளார்.

கோலாலம்பூரில் நடைபெற்ற அவர்களின் இசை நிகழ்ச்சியின்போது Matty Healy அந்தச் சட்டத்திற்கு எதிராக அவதூறு கூறினார்.

பின்னர் மேடையில் இருந்த குழுவைச் சேர்ந்த Ross MacDonald என்பவரை முத்தமிட்டார்.

அது மிகவும் மரியாதையற்ற செயல் என்று சாடிய மலேசியத் தொடர்பு, மின்னிலக்க அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில் (Fahmi Fadzil) அந்த 3 நாள் இசை நிகழ்ச்சியை இரத்துச் செய்தார்.

உள்ளூர்ச் சமூகத்தின் நம்பிக்கைகளை மதிக்கவேண்டும்; சமூகத்தின் உணர்வுகளைப் புண்படுத்தும் விதத்தில் நிகழ்ச்சிகள் இருக்கக்கூடாது என்று அமைச்சர் தமது Twitter பக்கத்தில் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *