உலக சாதனைப் படைத்தார் ரொனால்டோ!

200 சர்வதேச கால்பந்து போட்டிகளில் விளையாடிய வீரர் என்ற சாதனையை போர்த்துகல் அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ படைத்துள்ளார்.

ஐரோப்பிய சாம்பியன்ஷிப் தகுதிச் சுற்றில் 1-0 என்ற கோல் கணக்கில் ஐஸ்லாந்தை தோற்கடித்ததன் மூலம் 89 வது நிமிடத்தில் வெற்றி கோலை அடித்து அந்த மைல்கல்லை ரொனால்டோ கொண்டாடினார்.

செவ்வாயன்று ஐஸ்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் ரொனால்டோ ஒரே கோலை அடித்தார்.

யூரோ 2024 தகுதிச் சுற்றில் வில்லும் வில்லும்சன் 10 நிமிடங்களில் வெளியேற்றப்பட்ட பிறகு ஐஸ்லாந்து அணி 10 பேருடன் விளையாடியது.

முன்னதாக 196 சர்வதேச போட்டிகளில் விளையாடியிருந்த குவைத் அணியின் படேர் அல்-முதாவாவின் சாதனையை ரொனால்டோ மார்ச் மாதம் முறியடித்திருந்தார்.

தற்போது 38 வயதான கிறிஸ்டியானோ ரொனால்டோ 20 ஆண்டுகளாக போர்த்துகல் தேசிய அணிக்காக விளையாடி வரும் நிலையில், தற்போது இந்த சாதனையை படைந்துள்ளார்.

இதற்காக கிறிஸ்டியானோ ரொனால்டோவை கின்னஸ் சாதனை கௌரவித்துள்ளது.

போர்த்துகல் அணிக்காக 200 ஆட்டங்களில் விளையாடியமைக்கு மிகவும் பெருமைப்படுவதாக கிறிஸ்டியானோ ரொனால்டோ தெரிவித்துள்ளார்.

கிறிஸ்டியானோ ரொனால்டோவின் கால்பந்து வரலாற்றி பல உலக சாதனைகளை படைத்துள்ள நிலையில், இந்த புதிய சாதனையையும் படைத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *