இசைத்துறையில் சாதனைப் படைத்த இலங்கைப் பெண்!

தென்னிந்திய ஊடகமொன்றில் தமிழ் மக்களுக்கு பெருமை சேர்க்கும் வகையில், மாதுளானி பெர்னாண்டோ என்ற பெண் இசை துறையில் சாதனை படைத்துள்ளார்.

இலங்கை-திருகோணமலையை பிறப்பிடமாக கொண்ட இவர், தற்போது லண்டனில் வசித்து வருகின்றார்.

இசை துறையில் சாதனை

யுத்தம் காரணமாக லண்டனிற்கு இடம்பெயர்ந்து சென்ற இவர், தென்னிந்திய இசை நிகழ்ச்சியொன்றில் போட்டியாளராக தெரிவானார்.

இந்த போட்டியில் “விடை கொடு எங்கள் நாடே” என்ற ஈழத்தமிழர்களுக்கான பாடலை பாடி, அவையில் அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்து, ஈழ தமிழர்களின் வலியை மீண்டும் ஒருமுறை உலகறிய செய்தார்.

இந்நிலையில் குறித்த இசை போட்டியில் இறுதி போட்டியாளர்களை தெரிவு செய்யும் சுற்றில் வெளியேறிய மாதுளானிற்கு லண்டன் விமான நிலையத்தில் பெரும் வரவேற்பு கொடுக்கப்பட்டுள்ளது.

ஏ.ஆர்.ரகுமானின் கருத்து

இதனால் எதிர்வரும் காலத்தில் மாதுளானிற்கு இசை துறையில் பல வாய்ப்புகள் கிடைக்குமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை ஒஸ்கார் விருது பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், முதலாவது, இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களை பாடகர்களுக்கு வழங்குவதில் எனக்கு உடன்பாடில்லை.

வெற்றி தோல்விக்கு அப்பால் அனைவரும் சிறந்த பாடகர்கள் என குறித்த தென்னிந்திய ஊடகத்தின் இசை சமர் தொடர்பில் கருத்து தெரிவித்துள்ளார். 

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள புதுசுடர்  WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *