ஆசியாவில் சிறந்த 100 விஞ்ஞானிகளில் இடம்பிடித்த இலங்கையர்கள்!

உலகப் புகழ்பெற்ற சஞ்சிகையான ‘Asian Scientists’ 2023 ஆம் ஆண்டிற்கான 100 சிறந்த ஆசிய விஞ்ஞானிகளின் விபரங்களை வெளியிட்டுள்ளது.

இந்த சஞ்சிகையில் நான்கு இலங்கையர்களும் இடம்பிடித்துள்ளனர்.

கடல்வாழ் உயிரியலாளர், ‘ஓசியன்ஸ்வெல்’ நிறுவனர் ஆஷா டி வொஸ், கலாநிதி ரொஹான் பெத்தியகொட, கொழும்பு பல்கலைக்கழகத்தின் சதுரங்க ரணசிங்க மற்றும் மொரட்டுவ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த அஷானி சவிந்த ரணதுங்க ஆகியோர் இலங்கையைச் சேர்ந்த நான்கு விஞ்ஞானிகளாக இந்தப் பட்டியலில் இடம்பிடித்துள்ளனர்.

விருது விபரங்கள்

திமிங்கல ஆராய்ச்சியில் ஆஷா டி வோஸ் முன்னணியில் உள்ளார். கடல் பாலூட்டி ஆராய்ச்சியில் முனைவர் பட்டம் பெற்ற முதல் இலங்கை விஞ்ஞானி இவர் ஆவார்.

விலங்கியல் துறையில் 2022 லின்னேயன் பதக்கத்தை டாக்டர் ரோஹான் பெத்தியாகொடா வென்றார், பதக்கம் பெற்ற முதல் இலங்கையர் ஆவார். இலங்கையின் பல்லுயிரியலைப் பாதுகாப்பதில் அவரது தொடர்ச்சியான ஆராய்ச்சி, எழுத்து மற்றும் வாதிடுதல் உலகம் முழுவதும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

சதுரங்க ரணசிங்க 7வது ஷேக் ஃபஹ்மட் ஹிரோஷிமா – ஆசியா விளையாட்டு மற்றும் மருத்துவ விருது 2022 ஐப் பெற்றுள்ளார்.இந்த விருது நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆசியாவில் உள்ள மருத்துவ நிபுணருக்கு விளையாட்டு மருத்துவத்தில் அவர் ஆற்றிய பங்களிப்பிற்காக வழங்கப்படுகிறது.

அஷானி சவிந்த ரணதுங்க, கைத்தொழில் மற்றும் விவசாய கழிவுகளை பெறுமதி கூட்டப்பட்ட பொருட்களாக மாற்றியமைத்து சுற்றுச்சூழலுக்கு உகந்த நிர்மாண மற்றும் அபிவிருத்தி திட்டங்களுக்கு மூலப்பொருட்களாக பயன்படுத்தியதற்காக 2022 ஆம் ஆண்டிற்கான ‘OWSD-Elswire’ அறக்கட்டளை விருது பெற்றுள்ளார்.

ஆசியாவில் விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகள், அவர்களின் சாதனைகள், அறிவியலுக்கான அவர்களின் சேவை ஆகியவற்றை மதிப்பீடு செய்து, அவர்களின் சாதனைகளை ‘ஏசியன் சயின்டிஸ்ட்ஸ்’ இதழ். உலகுக்கு எடுத்துரைத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *