இலங்கையில் பதிவான நிலநடுக்கம்!

கம்பளை பிரதேசத்தில் சிறியளவிலான நிலநடுக்கமொன்று பதிவாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.

புவிசரிதவியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் இதனை தெரிவித்துள்ளது.

நேற்று இரவு இந்த நில அதிர்வு பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரிக்டர் அளவுகோலில் 2 என்ற அளவில் சிறிய நிலநடுக்கமாக இது பதிவாகியுள்ளதாக புவிசரிதவியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் மேலும் தெரிவித்துள்ளது.

சிறியளவிலான இந்த நில நடுக்கங்களால் பாதிப்புகள் எவையும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *