கையடக்க தொலைபேசிகளின் விலை குறைகிறது!

எதிர்காலத்தில் கையடக்க தொலைபேசிகளின் விலை குறையும் என தகவல் வெளியாகியுள்ளது.

கையடக்க தொலைபேசிகள், குளிர்சாதனப் பெட்டிகள், மின் விசிறிகள், பழங்கள் போன்ற அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்வதற்கு விதிக்கப்பட்டுள்ள விதிகள் தளர்த்தப்படவுள்ளன.

இதற்கமைய 843 வகையான பொருட்களை இறக்குமதி செய்வதற்கான பண வரம்பு தேவையை நீக்குவதாக மத்திய வங்கி நேற்று (01) அறிவித்துள்ளது.

அதாவது அந்த பொருட்களின் மொத்த மதிப்புக்கான பண வைப்பு வரம்பை நீக்குவதாக அறிவித்துள்ளது.
குறிப்பாக பணவீக்கம் மற்றும் கையடக்க தொலைபேசிகளின் இறக்குமதி மீதான கட்டுப்பாடுகள் காரணமாக, கையடக்க தொலைபேசிகளின் விலை வேகமாக அதிகரித்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *