திடீரென ஆபாச வீடியோவில் தோன்றிய மனைவி எடுத்த விபரீத முடிவு!
தெலங்கானா மாநிலம் மஞ்சிரியாலா மாவட்டத்தில், இந்தரம் என்ற கிராமம் உள்ளது.. இந்த கிராமத்தை சேர்ந்தவர் கனகய்யா… இவரது மனைவி பெயர் பத்மா. இவர்களுக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர்.
மூத்த மகள் மகேஷ் என்ற இளைஞரை காதலித்துள்ளார்.. மகேஷ் இதே ஊரை சேர்ந்தவர்தான். 24 வயதாகிறது.. இருவருமே நெருங்கி பழகியும் உள்ளனர்.. ஆனால், இவர்களுக்குள் கருத்து மோதல்கள் நிறைய ஏற்படவும், இந்த காதல் முறிந்துவிட்டது.
2 பேருமே பிரிந்துவிட்டனர்.. ஆனால், ஒருகட்டத்தில், மறுபடியும், அந்த பெண்ணிடம் காதலை சொல்லி, தன்னை காதலிக்கும்படி மகேஷ் கூறியுள்ளார். ஆனால், அந்த பெண், அடிக்கடி தகராறு வந்துகொண்டேயிருப்பதால், காதலை ஏற்க மனமில்லாமல் இருந்தார்..
இதனிடையே, பெண்ணின் வீட்டில், அவரது பெற்றோர், கடந்த வருடம் திருமணம் செய்து வைத்துவிட்டனர்.. நஸ்பூர் கிராமத்தை சேர்ந்தவர் மாப்பிள்ளை.. காதலிக்கு திருமணமாகிவிட்டது என்பதை கேள்விப்பட்டதுமே, மகேஷ் ஆத்திரமடைந்தார்.
மறுபடியும் அந்த பெண்ணை டார்ச்சர் செய்துள்ளார்.. அந்த பெண் நிம்மதியாக வாழவே கூடாது என்று முடிவெடுத்த மகேஷ், கல்யாணத்துக்கு முன்பு, எடுக்கப்பட்ட நெருக்கமாக இருந்த அந்த வீடியோக்களை எல்லாம் சோஷியல் மீடியாவில் பதிவிட்டுவிட்டார்..
இந்த வீடியோக்கள் திடீரென வைரலாகி விட்டதுடன், அவை எல்லாமே, இளம்பெண்ணின் கணவரின் பார்வைக்கும் போய்விட்டது.. அதை பார்த்து கொந்தளித்து போன கணவர், அந்த பெண்ணை விவாகரத்து செய்துவிட்டார்.
அப்போதும், அவமானம் தாங்காமல், கடந்த 6 மாதங்களுக்கு முன் தற்கொலையும் செய்து கொண்டார். இவ்வளவு செய்தபிறகும், மகேஷ் அடங்கவில்லை.. மறுபடியும் அந்த பெண்ணுக்கு டார்ச்சர் தர துவங்கினார்.. ஏற்கனவே, இளம்பெண் அதிர்ச்சியும், ஆத்திரத்திலும் இருந்த அந்த பெண்ணின் குடும்பம், ஜெய்ப்பூர் போலீசில் புகார் தந்தது..
போலீசாரும், இந்த புகாரின்பேரில் நடவடிக்கை எடுத்தனர்.. மகேஷையும், அந்த பெண்ணையும் வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர்.. மகேஷுக்கு அறிவுரைகளை சொல்லி அனுப்பி வைத்தனர். அப்போதும் மகேஷ் அடங்கவில்லை.. தொடர்ந்து தொல்லை கொடுத்துள்ளார்.
நேற்று அந்த பெண்ணின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்துள்ளார்.. இதற்குமேல் பொறுக்காத, அந்த பெண்ணின் குடும்பத்தினர், மகேஷை தடுத்து, கழுத்தை கத்தியாலேயே அறுத்துள்ளனர்.
கொடூர முடிவு: ஆத்திரம் தீராமல், அங்கிருந்த கல்லை தூக்கி, மகேஷ் தலையில் போட்டு சிதைத்துள்ளனர்.. மகேஷ் அங்கேயே சுருண்டு விழுந்து இறந்தார்.. பிறகு, மொத்த கொலையாளிகளும் போலீசுக்கு சென்று சரணடைந்துவிட்டனர். அவர்களிடம் போலீசார் விசாரித்து கொண்டிருக்கிறார்கள்..
அந்த பெண்ணை, அவரது கணவன் டைவர்ஸ் செய்த பிறகும்கூட, தற்கொலையும் செய்துகொண்ட பிறகும்கூட, மகேஷின் வெறித்தனம் அடங்காத நிலையில், இப்படி ஒரு கொடூரம் நடந்துள்ளது. இதில் கொடுமை என்னவென்றால், இந்த கொடூரக்காட்சிகள் வீடியோவாக சோஷியல் மீடியாவிலும் வெளியாகி பரபரப்பை கிளப்பி விட்டு வருகிறது.