சச்சின் டெண்டுல்கர் நடிகர் சூர்யா திடீர் சந்திப்பு!
அண்மையில் சூர்யா மும்பையில் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரன் சச்சின் டெண்டுல்கரை நேரில் சந்தித்தார்.
இது தொடர்பான புகைப்படத்தை அவர் தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்திருந்தார். இந்நிலையில், சச்சின் டெண்டுல்கர் ரசிகர்களின் கேள்விக்கு தனது இணையப் பக்கத்தில் பதில் அளித்தார்
அதில், ரசிகர் ஒருவர் சூர்யா, சச்சினை சந்தித்த புகைப்படத்தை பகிர்ந்து இது குறித்து சொல்லுங்கள் என்று கேள்வி எழுப்பினார். இதற்கு, “நாங்கள் இருவரும் ஆரம்பத்தில் மிகவும் கூச்சமாக இருந்தோம், ஒருவரையொருவர் தொந்தரவு செய்ய விரும்பவில்லை, ஆனால் இறுதியில் இருவரும் நன்றாக பேசிக்கொண்டோம்”என்று சச்சின் பதிவிட்டுள்ளார். இந்த பதிவை தற்போது ரசிகர்கள் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.