தோனி விளையாடிய ஒரே ஓவரில் 2.2 கோடி பார்வைகளைப் பெற்ற ஜியோசினிமா!

!

ஜியோசினிமா செயலியில் பார்வையாளர்களின் எண்ணிக்கை கூடியுள்ளது. ஆனாலும், சில சிக்கல்கள் இந்த செயலியில் இருப்பதாக பயனர்கள் சொல்கின்றனர். சென்னை ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்றிரவு சென்னை சேப்பாக்கத்தில் நடந்த லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ராஜஸ்தான் ராயல்சுடன் மோதியது.

இதில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 175 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 176 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி களமிறங்கியது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு சென்னை அணி 172 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது. இதன்மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் 3 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

தோனி பேட்டிங் செய்யும் போது ஜியோசினிமா வை பார்த்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. 2022 வரை டிஜிட்டலில் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பப்பட்ட ஐபிஎல் ஜியோசினிமா இந்த ஆண்டு முதல் இலவசமாக ஒளிபரப்புகிறது.ஐபிஎல் போட்டிகளுக்கு ஹாட்ஸ்டார் பணம் வசூலித்தது.ஐபிஎல் முதல் வாரத்தில் ஹாட்ஸ்டார் பார்வைகளின் சாதனையை ஜியோசினிமா முறியடித்தது.

ஐபிஎல் முதல் வாரத்தில் ஜியோசினிமா 550 கோடி பார்வைகளைப் பெற்றது. Also Read – ஐபிஎல்: சஞ்சு சாம்சனுக்கு ரூ.12 லட்சம் அபராதம்..! காரணம் என்ன ? ஐபிஎல் போட்டிகள் நடந்து வருவதால் பார்வைகள் அதிகரித்து வருகின்றன.லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் தோனி 2 சிக்சர்கள் விளாசி ஆட்டமிழந்தார். தோனி கிரீஸில் நுழைந்தவுடன், பார்வைகள் 1.7 கோடியை எட்டியது.

சந்தீப் சர்மாவின் பந்துவீச்சில் தோனி அடுத்தடுத்து இரண்டு பெரிய சிக்ஸர்களை அடித்தார். இந்த சிக்ஸர்களால் நிகழ்நேரம் மேலும் அதிகரித்து 2.2 கோடியைத் தொட்டது. Also Read – ஐ.பி.எல்: பெங்களூருவில் நடைபெறவுள்ள போட்டியில் பச்சை நிற ஜெர்ஸியில் களமிறங்கும் ஆர்.சி.பி. அணி.! ஏற்கனவே இரவு 11:30 மணி ஆகியிருந்தது. அந்த நேரத்தில் இந்த அளவுக்கு பார்வைகள் வருவதே பெரிய விஷம். இதற்கு காரணம் தோனி தான் என்று அவரது ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் இடையேயான ஐபிஎல் 2019 சீசனின் இறுதிப் போட்டியில், தோனியின் பேட்டிங் அதிகபட்சமாக 1.8 கோடி பார்வைகளை எட்டியது. டிஸ்னி பிளஸ் ஹட் ஸ்டாரில் இதுவே அதிகபட்சம். இலவச ஜியோ சினிமா வெற்றியின் காரணமாக, டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரின் நிகழ்நேரப் பார்வையாளர்கள் சாதனையும் முதல் காலாண்டிலேயே முறியடிக்கப்பட்டது.

பிளேஆப் போட்டிகள் இன்னும் சுவாரஸ்யமாக இருக்கும். தகுதிச் சுற்றுகள், எலிமினேட்டர்கள் மற்றும் இறுதிப் போட்டிகள் மூலம், ஐபிஎல் 2023 சீசனில் புதிய சாதனைகள் நிச்சயிக்கப்படும் என்று கூறப்படுகிறது. ஜியோ சினிமா தளத்தில் பார்வையாளர்களின் எண்ணிக்கை கூடியுள்ளது. ஆனாலும், சில சிக்கல்கள் இந்த செயலியில் இருப்பதாக பயனர்கள் சொல்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *