30-35 வயதுக்குள் மனைவிக்குள் நடக்கும் மாற்றம்? இதில் கணவன் கோட்டை விட்டால்!!

 

திருமண வாழ்வில் ஒருவனுக்கு ஒருத்தி் எனற நிலை மாறி, தேவையான போது சட்டையை மாற்றுவது போல் தாலி கட்டிய மனைவியை மாற்றுவது, என்னைப் பொருத்தவரை, மாபெரும் துரோகம். மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்பது பாட்டிலும் ஏட்டிலும்தானா? ஒருவருக்கொருவர் பரிமாரிக்கொண்ட அன்பு, பாசம் எல்லாம் வேஷம் தானா? பிள்ளை பெற்றுக் கொள்வதும் சமையல் செய்வது, வீட்டு வேலை செய்வது போன்ற ஒரு கடமைதானா? நெஞ்சில் ஈரமில்லாத இத்தகைய செயல், படித்த பணக்கார குடும்பங்களில் சகஜமாக காணப்படுகிறது.

ஆனால் உண்மையான அன்பும் பாசமும் புரிதலும் உள்ள கணவன் மனைவியருக்கு இடையில் ஆளை மாற்றும் எண்ணம் இருப்பதில்லை. அப்படிப்பட்ட என் தாத்தா சொன்னத்தை பாருங்கள். “எனக்கு 23 வயதில் திருமணமானது. என் மனைவி அதிகம் படிக்காதவள், ஏழ்மையான நிலையில்தான், எந்தவித எதிர் பார்ப்பும் இன்றி திருமணம் செய்து கொண்டேன். இப்பொழுது, எனக்கு 85 வயது, என் மனைவிக்கு 82 வயதாகிறது. எங்களுக்குத் திருமணமாகி 62 ஆண்டுகள் ஆகின்றன. இதுவரை, நாங்கள் ஒருவரை ஒருவர் பிரிந்ததில்லை. என் மனைவிக்கு உடல் நிலை சரியில்லாமல் இருப்பதால் எங்களுக்குள் தாம்பத்திய உறவு இன்றி கடந்த 20 ஆண்டுகளாக வாழ்ந்து கொண்டுருக்கிறோம்.

ஆனால் எங்களுக்குள் அன்பு குறையவில்லை. என் மனைவியின். உடல் நிலையினால், என்னுடைய உதவி அவளுக்கு மிகவும் தேவைப்படுகிறது. அவளை இக்காரணங்களுக்காக நான், என் சுகத்திற்காக, பிரிய நினைத்தால், நான் மனிதனாக இருக்கவே தகுதியற்றவனாகி விடுவேன். எங்கள் கடந்தகால வாழ்க்கையை, அன்பான அரவணைப்பை, அனுபவித்த சுகத்தை எண்ணாமல் புது சுகம் தேடலாமா? பிறகு, மனிதனுக்கும் மிருகத்திற்கும் என்ன வித்தியாசம்?”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *