சஜித் பிரேமதாசவின் ஆங்கிலம் வெள்ளைக்காரனுக்கும் புரியாதாம்!

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பயன்படுத்தும் ஆங்கில மொழி வெள்ளையர்களுக்குக் கூட புரியாது என மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

எனவே, சஜித் பிரேமதாச என்ன கூறுகின்றார் என்று வெள்ளையர்களும் அகராதிகளைப் புரட்டிப் பார்ப்பதாக டில்வின் சில்வா தெரிவித்தார்.

தேசிய மக்கள் சக்தியின் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

வெள்ளையர்களிடம் ஆங்கிலத்தில் பேசி உதவி கேட்கலாம் என சஜித் பிரேமதாச நினைக்கிறார் என்றும் மேலும் வெள்ளையர்களிடம் ஆங்கிலத்தில் பேசி நாட்டை கட்டியெழுப்ப உதவி கேட்க முயற்சிக்கிறாரா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *