செம்பருத்தி பூவின் மகத்துவம்!

 

செம்பருத்தி செடியின் மருத்துவ குணங்களை நாம் அறிவோம்.,

செம்பருத்தி செடியில் இருக்கும் பூவை எடுத்து அதனை நமது தோழர்கள் கொடுத்து உண்பதும் பள்ளிகளின் தோட்டங்களில் இருக்கும் செம்பருத்தி செடியில் இருக்கும் செம்பருத்தி பூவை பறித்து நண்பர்களுடன் சாப்பிட்ட காலமும் உண்டு.

உடலுக்கு நல்ல விதமான பயன்களை அளிக்கும் செம்பருத்தி மருத்துவகுணங்கள் பற்றி காண்போம்..

முடியில் ஏற்படும் நரை முடி பிரச்சனை குணமாகிறது.,

செம்பருத்தி செடியின் செம்பருத்தி பூவில் இருந்து எடுக்கப்பட்ட சாற்றுடன் சம அளவு தேங்காய் எண்ணையை வாணலியில் போட்டு காய்ச்சி வடிகட்டி தேய்த்து வந்தால் தலைமுடி அடர்த்தியாக வளரும்.

நாலு செம்பருத்தி இலைகளை இரண்டு டம்ளர் நீர் விட்டு காய்ச்சி கற்கண்டு சேர்த்து குடித்து வந்தால் சிறுநீர் எரிச்சல் குணமாகும்

. பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் பிரச்சனைகளுக்கு செம்பருத்தி பூக்களை பசையாக அரைத்துக்கொண்டு வெறும் வயிற்றில் காலை வேலையில் உட்கொள்ளவேண்டும்.

ஏழு நாட்களுக்கு இதனைத் தொடர்ந்து உட்கொள்ள வேண்டும்.

செம்பருத்தி பூவின் இதழ்கள் சுமார் 15 எடுத்துக்கொண்டு அதனுடன் தளிர் இலைகளை சேர்த்து கொதிக்க வைத்து 1 தேக்கரண்டி அளவு தேன் கலந்து குடித்து வந்தால் இருமல் உடனடியாக தீரும்.

செம்பருத்திப்பூவை அரைத்து., நீரில் இட்டு காய்ச்சி குடித்து வந்தால் சிறுநீர் கழிக்கும்போது ஏற்படும் எரிச்சலும் குணமாகும்.

செம்பருத்திப் பூவில் இருக்கும் மருத்துவ குணத்தால் இதய நோய் வராமல் பாதுகாக்க முடியும்.

செம்பருத்தி பூ பொடியை காயவைத்து பொடியாக அரைத்துக்கொண்டு சாப்பிட்டு வந்தால் இதயமானது பலம் பெறும்.

செம்பருத்தி பூவுடன் காலையிலும் மாலையிலும் மருதம்பட்டை சேர்ந்து ஒரு கரண்டி சாப்பிட்டு வந்தால் இரும்புச் சத்து மற்றும் ரத்தசோகை நோய் குறையும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *