கோவிலில் பிரசாதமாக வழங்கப்பட்ட சாராயம் வாங்க குவிந்த பக்தர்கள்!

பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள பாபா கோவிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக மதுபானம் வழங்கப்பட்டதை அடுத்து அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது..

பஞ்சாபில் அமிர்தசரஸ்-படேகல் சாலையில் உள்ள போமா கிராமத்தில் பாபா ரோட் ஷா கோவில் உள்ளது. ஒவ்வொரு மார்ச் மாதமும், பாபா அடக்கம் செய்யப்பட்ட இந்த இடத்தில் பக்தர்கள் சிறப்பு வழிபாடு நடத்துகிறார்கள். நேற்று (மார்ச் 23) ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். பின்னர் பாட்டில் திறக்கப்பட்டு பக்தர்களுக்கு மது வழங்கப்பட்டது. கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.

பஞ்சாபில் உள்ள இந்த பாபா ரோட்ஷா கோவில் இந்தியாவின் தனித்துவமான மத தலங்களில் ஒன்றாகும். இக்கோயில் 90 ஆண்டுகளுக்கும் மேலாக வழிபட்டு வருவது சிறப்பு.

பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் மாவட்டத்தின் தவான் கிராமத்தைச் சேர்ந்த பாபாவின் குடும்பத்தினர் 1896ம் ஆண்டு தற்போது கோவில் கட்டப்பட்டுள்ள போமா கிராமத்தில் குடியேறியுள்ளனர். பின்னாட்களில் இவர் சன்னியாசியாக மாறிய பின்னர் அருகாமையில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர் பாபாவை அணுகி தனக்கு திருமணமாகி பல ஆண்டுகள் ஆகிவிட்ட போதிலும் குழந்தை வரம் கிடைக்கவில்லை என மனமுருகி வேண்டியுள்ளார். பின்னர் அந்த விவசாயிக்கு குழந்தை பிறக்கவே, அவர் மகிழ்ச்சியில் பாபாவை நாடி வந்து பணத்தை அவருக்கு காணிக்கையாக தந்திருக்கிறார்.

விவசாயி கொடுத்த பணத்தை பாபா ஏற்க மறுத்து, இந்த பணத்தை பயன்படுத்தி மது பாட்டிலை வாங்கி தனது சீடர்களுக்கு பிரசாதமாக கொடுக்குமாறு கூறினார்.அவரின் நினைவாக அவரின் பக்தர்களுக்கு மது வழங்கும் வழக்கம் ஏற்பட்டுள்ளது.

பாபா ரோஷா கோவிலில் ஆண்டுதோறும் மார்ச் மாதம் இரண்டு நாட்கள் திருவிழா நடைபெறும். பஞ்சாப் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர். இந்த நிகழ்வில், ஆண்களும் பெண்களும் முண்டியடித்துக் கொண்டு பெற்று செல்கின்றனர்.

கரோனா நெருக்கடியால் இக்கோயிலில் மக்கள் திரண்டிருந்த சமயங்களில் இந்தச் செய்தி சமூக வலைதளங்களில் பரவியது குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *