அமெரிக்க – ரஷ்யா இடையே போர் மூலம் அபாயம்!

ரஷ்யாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான பதற்றம் தீவிரமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ரஷ்ய விமானம் ஒன்று அமெரிக்காவின் ஆளில்லா வானூர்தியுடன் கருங்கடலுக்கு மேல் மோதிக்கொண்டதாகக் கூறப்படுவதைத் தொடர்ந்து நிலைமை மோசமாகியுள்ளது.

அணுவாயுத வல்லமை பெற்ற இரு நாடுகளின் தற்காப்பு அமைச்சர்களும் அதன் தொடர்பில் தொலைபேசியில் உரையாடியிருக்கின்றனர்.

அவர்கள் ஒருவரை ஒருவர் குறைகூறினர். Crimea பகுதிக்கு அருகே ஆளில்லா வானூர்திகளை இயக்கியது சினமூட்டும் செயல் என்றும் அதனால் பதற்றம் அதிகரிக்கக்கூடும் என்றும் ரஷ்யத் தற்காப்பு அமைச்சர் Sergei Shoigu குறிப்பிட்டார்.

ஆனால் மோதல் நடந்ததாகச் சொல்லப்படுவது அனைத்துலக ஆகாயவெளியில் என்று அமெரிக்கத் தற்காப்பு அமைச்சர் Lloyd Austin வலியுறுத்தினார்.

அந்தப் பகுதியை உக்ரேனிடமிருந்து இணைத்துக்கொண்டுள்ளதாக ரஷ்யா கூறிவருகிறது.

ஆளில்லா வானூர்தியின் சிதைவுகளைக் கண்டுபிடிக்க முடியாது என்று வெள்ளை மாளிகை குறிப்பிட்டது.

ஆனால் ரஷ்யா அவ்வாறு செய்ய முற்படுவதாகக் குறிப்பிட்டது.

ரஷ்யா ஏனைய தரப்புகளை ஈடுபடுத்தி, உக்ரேன் போரைப் பெரிதாக்க முயல்வதாகக் கீவ் குறைகூறியிருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *