கரையான்புற்றைப்பற்றி – தெரிந்துகொள்வோம்

 

கரையான்கள் இவைகள் நம் வீட்டில் புற்றை கட்டிருப்பதை பார்த்திருப்பீர்கள்,ஆனால் காட்டில் கட்டியிருக்கும் புற்றினை பார்த்திருக்கிறீர்களா?

காட்டில் உள்ள கரையான் புற்றின் ஆழம் நன்கு வளர்ந்த மூன்று மனிதர்களை ஒன்றன் மேல் ஒன்றை நிற்கவைத்தால் எவ்வளவு உயரம் இருக்குமோ அவ்வளவு ஆழம் பூமியில் இவை புற்றை கட்டும்.

இவைகளில் தனி தனி பிரிவுகள் உள்ளன. புற்றினை பாதுகாக்க தனி பிரிவு, உணவு தேட தனி பிரிவு, புற்றின் உட்புறத்தை பாதுகாக்க தனி பிரிவு போன்ற பல பிரிவுகள் உள்ளன.

புற்றின் காவலாளிகள் உயிரினை பொருட்படுத்தாது பணி ஆற்றும். இவை ஒவ்வொன்றிற்கும் தனி தனி அறைகள் இருக்கும என்பது தான் ஆச்சரியம்.

புற்றின் மேற்பகுதியில் ஒரு பகுதி வதியாக 24 மணிநேரமும் தண்ணீர் சொட்டிக்கொண்டே இருக்கும் படி தான் இவைகள் புற்றை அமைக்கும்.

இதனால் புற்றின் உள் பகுதிக்கு குளிர்ந்த காற்று செல்வது சாத்தியமாகிறது. ஏதேனும் பிரட்சனையால் புற்று சேதமடைந்தால் உடனே அதை சரி செய ஒரு பிரிவும் இதில் உண்டு.

கரையான்களில் இராணி கரையான் ஒரே நேரத்தில் பல லட்சக்கணக்கான முட்டைகளை இடுமாம்.

முட்டைகள் எப்பொழுதும் சூடாக இருக்க புற்றின் மேற் பகுதியிலிருந்து நேராக அந்த அறைக்கு சூரிய ஒளி வரும் படி அவைகள் புற்றினை அமைக்கும்.

மேலும் புற்று அவ்வபோது பரிசோதனைக்குட்படுத்த­ப்பட்டு குறைகள் சீர் செய்யப்படுகின்றன.

ஏதேனும் ஆபத்தென்றால் நிமிடத்தில் புற்றின் மேற்பகுதி மூடப்பட்டு மறைக்கப்படும்.

இவ்வளவு திறமைகளைக் கொண்டுள்ள கரையான்களுக்கு மூளை கிடையாது..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *