டொலர்களால் இலங்கைக்கு வருமானத்தை பெற்றுக் கொடுத்த அரபு நாடு!

 

உலகின் மிகப்பெரிய பயணிகள் விமானமும் முழு நீள இரட்டை அடுக்கு விமானமான ஐக்கிய அரபு இராச்சியத்தின் Emirates A380-842 (Reg-EK449) விமானம் நியூஸிலாந்தின், Auckland விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு டுபாய் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த வேளை ஏற்பட்ட எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக இலங்கை கட்டுநாயக்கா விமான நிலையத்தில் இன்று அதிகாலை 3.14 மணியளவில் அவசரமாக தரையிறங்கியதாக தெரிவிக்கப்படுகிறது.

பின்னர் 62800 லீற்றர் Jet A1 தர எரிபொருளை கட்டுநாயக்க விமான நிலையத்தில் நிரப்பிக்கொண்டு 4.50am மணிக்கு டுபாய் நோக்கி பறந்தது.

இதற்காக சுமார் 1 மணி நேரமும் 40 விநாடிகளில் செலவானது.

இதன் மூலம் இலங்கைக்கு சுமார் ஒரு கோடி 72 லட்சம் (17,210,779.60) ரூபாய் பெறுமதி மிக்க அமெரிக்க டொலர்கள் இலங்கைக்கு வருமானமாக கிடைத்துள்ளது.

நீண்டதூரம் பயணம் செய்யும் உலகின் மிகப்பெரிய விமானம் எரிபொருள் தட்டுப்பாடுகளுடன் பயணத்தை மேற்கொள்வதில்லை.

கடந்த சில நாட்களாக இலங்கையில் டொலரின் பெறுமானம் சரிவடைந்து ரூபாவின் பெறுமானம் உயர்வடைந்து வருவதன் பின்னணியிலும் முஸ்லிம் நாடொன்றின் பில்லியன் கணக்கிலான நன்கொடை மற்றும் கடன் உதவியும் அடங்கி இருக்கிறது.

மொத்தத்தில் இலங்கையை கட்டியெழுப்பும் நோக்கில் உதவ முடியுமான அனைத்து வழிகளிலும் முஸ்லிம் நாடுகள் இலங்கைக்கு உதவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *