வங்கிகளை முற்றுகையிட்டு மக்கள் ஆர்ப்பாட்டம்!

ஊழலை ஒழிக்கும் விதமாக நைஜீரியாவில் 200, 500 மற்றும் 1,000 நைரா நாணயத்தாள்களை புழக்கத்தில் இருந்து அகற்றுவதாக அந்நாட்டின் மத்திய வங்கி கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் அறிவித்தது.

அவற்றை 2023 ஆம் ஆண்டு ஜனவரி 31 ஆம் திகதிக்கு முன்னதாக வங்கியில் கொடுத்து மாற்றிக்கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டிருந்ததுடன், பெப்ரவரி 20 ஆம் திகதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது.

எனினும், போதுமான அளவில் புதிய நைரா நாணயத்தாள்களை வங்கிகளால் புழக்கத்திற்கு கொண்டு வர முடியவில்லை. மேலும் வாடிக்கையாளர்கள் தங்களது கணக்கில் இருந்து பணத்தை எடுப்பதற்கு வங்கிகள் பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. இதனால் பணப்புழக்கம் இல்லாமல் கடும் கொந்தளிப்பிற்கு ஆளான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வங்கிகள் மற்றும் அரசு அலுவலகங்களை முற்றுகையிட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதுடன், இந்த போராட்டங்களில் வன்முறைகளும் இடம்பெற்று வருகின்றன.

மேலும், சில இடங்களில் போராட்டக்காரர்கள் வங்கிகளுக்கு தீவைத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *